AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Venky Atluri: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!

Venky Atluri About Vishwanath And Sons Movie: தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குநர்கள் மத்தியில் ஒருவராக இருப்பவர் வெங்கி அட்லூரி. இவரின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தின் டைட்டில் முதல் பார்வை வெளியாகியுள்ள நிலையில், அந்த படம் குறித்து வெங்கி அட்லூரி நெகிழ்ச்சி விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

Venky Atluri: நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில்.. விஸ்வநாத் & சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Mar 2026 15:18 PM IST

இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் கடந்த 2023ம் ஆண்டில் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான வாத்தி (Vaathi) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக வெளியாகியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக வெங்கி அட்லூரி, துல்கர் சல்மானை வைத்து “லக்கி பாஸ்கர்” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யாவுடன் (Suriya) படத்தில் இணையவுள்ளார் என கூறப்பட்டிருந்தது. அந்த படம்தான் ஆரம்பத்தில் சூர்யா46 (Suriya46) என அழைக்கப்பட்டுவந்தது. இதன் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே முழுமையாக நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் இன்று (02/03/2026) வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு படக்குழு, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath And Sons) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கி அட்லூரி நெகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரியோ ராஜ் – வெளியானது அறிவிப்பு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து வெங்கி அட்லூரி தெரிவித்த விஷயம் :

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ், நாங்கள் போற்றிய மனிதர், நாங்கள் கொண்டாடிய கலைஞர், நீங்கள் காதலிக்கும் ஒரு தந்தை. நீங்கள் இதுவரை பார்த்திராத வகையில் அவரை காண்பித்திருக்கிறோம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட டைட்டில் மற்றும் முதல் பார்வை குறித்த பதிவு:

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இருவரின் காதல் குறித்தும், அவர்களுக்கிடையே கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசம் இருப்பதுபோன்ற கதைக்களத்தில் அமைந்துள்ளதாம்.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்திலிருந்து வெளியானது தபாஹி சிங்கிள் வீடியோ!

இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் போன்ற பிரபலங்களும் இணைந்தது நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us