விஸ்வநாத் & சன்ஸ்… இதுதான் சூர்யா 46 படத்தின் டைட்டில்!
Suriya 46 Movie Title and First Look Released: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யா பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் தனது 46-வது படத்திற்காக கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தற்போது தமிழில் முன்னணி நாயகனாக உள்ள நடிகர் சூர்யாவை வைத்து அவரது 46-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். முன்னதாக இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகும் படங்களை தமிழ் ரசிகர்கள் கவனிக்க தொடங்கினர். தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார்.
லக்கி பாஸ்கர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை இயக்க தயாரானார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இந்த அறிவிப்பை நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் புரமோஷனில் கூறினார். அது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.




சூர்யா 46 படத்திற்கு விஸ்வநாத் & சன்ஸ் என்று பெயர் வைத்த படக்குழு:
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் வெளியீடு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு பிறகு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் இன்று சூர்யா 46 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யாவின் 46-வது படத்திற்கு படக்குழு என்று பெயர் வைத்துள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Power in his presence. 🔥
Warmth in his embrace.🤍Bringing back the vintage magic of @Suriya_offl in a heart-touching family spectacle. 🤩#VishwanathAndSons ~ The biggest family drama of the year arrives this July. 🫶🏻#VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena… pic.twitter.com/frvwNwuU8f
— Sithara Entertainments (@SitharaEnts) March 2, 2026
Also Read… அஜித்குமார் குறித்து நெகிழ்ந்து பேசிய ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் வீடியோ