D 56 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்
Dhanush 56 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் ராமிடம் உதவியாளராக தனது பணியைத் தொடங்கியவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து பத்திரிகைகளில் கதைகளை எழுதி பிரபல மான இவர் வெள்ளித்திரையில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். நடிகர்கள் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநராக அறிமுகமான முதல் படமே மாரி செல்வராஜிற்கு வெற்றியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இதுவரை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் காளமாடன் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய இந்த 5 படங்களுமே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தனுஷ் 56 படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் குறித்து சமீபத்தில் மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனுஷ் 56 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
தனுஷ் 56வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது. சமீபத்திய பேட்டியில் இயக்குநர் மாரி செல்வராஜ் இதை உறுதிப்படுத்தினார். மேலும் அரசியலையும் வரலாற்றையும் கலந்து, இது தனது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் நடித்து வருகிறார். 6 மாதங்களில் D55 படத்தை முடித்துவிட்டு தனுஷ் 56 படத்தின் படப்பிடிப்ப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… யாசின் டாக்ஸிக் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்
இணையத்தில் வைரலாகும் மாரி செல்வராஜ் பேச்சு:
#D56 – Shoot Begins in September.. 🔥 Confirmed by #MariSelrvaraj in a Recent Interview..⭐ He also mentioned that this is gonna be the biggest Film of his career, blending Politics+History.. 💥
• #Dhanush will complete #D55 with Rajkumar Periyasamy in 6 months and move on to… pic.twitter.com/jDPJFgDeAL
— Laxmi Kanth (@iammoviebuff007) February 28, 2026
Also Read… மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் வித் லவ் படம்? வைரலாகும் தகவல்



