இணையத்தில் வைரலாகும் சூரியின் மண்டாட்டி படத்தின் ஷூட்டிங் அப்டேட்
Sooris Mandaadi Movie Shooting Update: நடிகர் சூரி நாயகனாக தற்போது நடித்து வரும் படம் மண்டாட்டி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடப்படாத வேடங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக நடித்த சூரி பிறகு படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகர் சூரி காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் சூரி காமெடி வேடத்தில் நடித்து இருந்தால் அந்தப் படம் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாகவே மாறியது. இதன் காரணமாக சூரி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே பலப் படங்கள் கால் ஷீட்டிற்கு காத்திருந்ததும் உண்டு. இப்படி காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நாயகனகாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சமீப காலமாக காமெடி நடிகர்கள் கதையின் நாயகனாக நடிப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வரிசையில் நடிகர் சூரியும் இணைந்தார். அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை தவிர்த்துவிட்டு தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார் சூரி. இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான மாமன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




இணையத்தில் வைரலாகும் சூரியின் மண்டாட்டி படத்தின் ஷூட்டிங் அப்டேட்:
இந்த நிலையில் சூரி தற்போது மண்டாட்டி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் சூட்டிங் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. மண்டாடி படத்தின் 90 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இதில் தொண்டியின் கிளைமாக்ஸ் உட்பட. ஃப்ளாஷ்பேக் உட்பட 30 நாட்கள் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளது. தலைப்பு ஒரு மீன்பிடி குழுவின் தலைவரைக் குறிக்கிறது.. இந்த படம் தமிழ்நாட்டின் 100 கிலோமீட்டர் கடற்கரைக்கு தனித்துவமான ஒரு விளையாட்டைப் பற்றியது.
Also Read… Kajal Aggarwal: ‘நடிகைகள் கவர்ச்சி காட்டுவது தவறில்லை’ – வெளிப்படையாக பேசிய காஜல் அகர்வால்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Mandaadi – So for 90 days of shoot is completed including Climax in Thondi..🤝 30 Days of shoot is pending including flashback..⭐
• The title refers to a Leader of a Fishing Team.. the Film is about a Sport peculiar to the 100-kilometre stretch of the Tamil Nadu coastline..💥… pic.twitter.com/VkmUeWgUXK
— Laxmi Kanth (@iammoviebuff007) February 25, 2026
Also Read… பர்த்டே பாய் நானியின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஹாய் நானா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?