AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Purushan Movie: விஷால் – தமன்னா கூட்டணி : தொடங்கியது ‘புருஷன்’ படத்தின் ஷூட்டிங்!

Purushan Movie Shooting Update: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷால். இவரின் நடிப்பில் புது படங்கள் தயாராகிவரும் நிலையில், தற்போது சுந்தர் சி இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு புருஷன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் தொடங்கியதாக விஷால் தெரிவித்துள்ளார்.

Purushan Movie: விஷால் – தமன்னா கூட்டணி : தொடங்கியது ‘புருஷன்’ படத்தின் ஷூட்டிங்!
புருஷன் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Feb 2026 16:49 PM IST

தமிழில் பிரபலமான இயக்குநராக தொடர்ந்து படங்களை இயக்கிவருபவர் சுந்தர் சி (Sundar C). இவரின் இயக்கத்தில் இறுதியாக கேங்கர்ஸ் (Gangers) என்ற படமானது கடந்த 2025ம் ஆனதில் வெளியாகியிருந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மேலும் சுந்தர் சி தனது இயக்கத்தில் உருவாகும் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார். இவரின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2) படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை அடுத்தாக மேலும் ஒரு புது திரைப்படத்தை இவர் இயக்கவுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி-யுடன் நடிகர் விஷால் (Vishal) இணையவுள்ளார். இவர்களின் கூட்டணியில் ஆம்பள மற்றும் ஆக்ஷன் போன்ற படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதையடுத்தாக இந்த கூட்டணி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த புது படத்திற்கு புருஷன் (Purushan) என படக்குழு டைட்டில் வைத்துள்ளது. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா (Tamannaah) நடித்துவருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக விஷால் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த சினிமா துறை அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்… தமன்னா ஓபன் டாக்

புருஷன் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடக்கம் குறித்து விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அந்த பதிவில் நடிகர் விஷால், தனக்கு பிடித்த இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும், புருஷன் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

புருஷன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த புருஷன் திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவின் படம் என்ன ஆச்சு? சேயோன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இணையும் இயக்குநர் இவரா?

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இன்னும் 3 முதல் 4 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்தது இப்படம் வரும் 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். அதன்படி இப்படம் 2026 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.