Mookuthi Amman 2: 6 மாத கடின உழைப்பு.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் ஓவர்.. வைரலாகும் அறிவிப்பு வீடியோ!
Mookuthi Amman 2 Movie Shoot Wrap: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் படம்தான் மூக்குத்தி அம்மன் 2. இதில் நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் அதிரடி கதாநாயகியாக படங்களில் நடித்து அசத்திவருபவர் நயன்தாரா (Nayanthara). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழி படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தற்போது தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக இருந்துவருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் நடித்துவரும் புது திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இந்த திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் (Isari K Ganesh) தயாரித்துவருகிறார். இப்படம் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான மூக்குத்தி அம்மன் 1 படத்தின் கதையை தொடர்ந்து உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் 15ம் தேதியில் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. அந்த வகையில் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாம்.
இந்த படமானது மிக பிரம்மாண்டமான தெய்வீகம் கதைக்களத்தில் தயாராகிவந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் பெற்றதாக படக்குழு அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது.




இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி.. கமல்ஹாசனுடன் இணைகிறாரா வெற்றிமாறன்?
மூக்குத்தி அம்மன் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Capturing the magic and dedication behind the scenes of Sundar C’s #MookuthiAmman2 🔱
A #SundarC Mega Divine Entertainer 🔥@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara @kushmithaganesh @hiphoptamizha @thinkmusicindia @ReginaCassandra @iYogiBabu… pic.twitter.com/P81xnllfeW
— Vels Film International (@VelsFilmIntl) December 30, 2025
இந்த மூக்குத்தி அம்மன் பாகம் 1ன் படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி அசத்தியிருந்தார். அந்த வகையில் பாகம் 1-னை போல பாகம் 2ம் ரசிகர்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக சுந்தர் சி படம் என்றாலே நகைச்சுவை மற்றும் திகில் இருக்கும். அதில் தெவீகமும் கலந்த கலவையாக இந்த மூக்குத்தி அம்மன் 2 படம் தயாராகிவருகிறது. இதில் நயன்தாராவுடன் நடிகர்கள் ஊர்வசி,ரெஜினா, சினேகா, மீனா, அபிநயா, குஷ்பு, தான்யா விஜய். யோகிபாபு, மைனா நந்தினி, இனியா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். சுந்தர் சியும் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினிகாந்தை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? வைரலாகும் தகவல்
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிதான் இசையமைத்துவருகிறார். இந்த படமானது சுமார் ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.