புதிய கட்சியைத் தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் – என்ன பெயர் தெரியுமா?
New Party Set for Launch : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வம் எந்த முடிவெடுக்காததால் அதிருப்தியில் இந்த முடிவெடுத்துள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு வரும் பிப்ரவரி 19, 2026 அன்று வெளியாகவுள்ளது.
சென்னை, பிப்ரவரி 17 : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneerselvam) ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் வருகிற பிப்ரவரி 19, 2026 அன்று இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்கிய பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கூட்டணியில் இணைவார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது அதில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவெடுக்காத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் இத்தகைய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ஆம் தேதி வரை நடைபெறும்… சபாநாயகர் மு. அப்பாவு அறிவிப்பு!




புதிய கட்சியின் பெயர் என்ன?
இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது புதிய கட்சிக்கு எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பெயரை அவர் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற பிப்ரவரி 19, 2026 அன்று நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்பில் கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகமுகவில் இருந்து புதிய கட்சிகள் உருவாகியுள்ள நிலையில் தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிய கட்சி உருவாவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சசிகலாவும் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : இடைக்கால பட்ஜெட் 2026 – தூய்மை பணியாளர்களுக்கு 33,000 வீடுகள்… ஐடி பார்க்.. பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்புகள் எவை?
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது இந்த கூட்டத்தில் இனி ஒபிஎஸ் அணியில் தொடர வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து ஓபிஎஸ் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மொத்தமாக விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.