AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

9 நியோ டைடல் பார்க்.. 25 ஆயிரம் பேருக்கு வேலை.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. லிஸ்டில் உங்க ஊர் இருக்கா!

Neo Tidal Parks: தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ.388 கோடியில் 9 இடங்களில் நியோ டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அது எந்தெந்த இடங்கள் என்பதை பார்க்கலாம்.

9 நியோ டைடல் பார்க்.. 25 ஆயிரம் பேருக்கு வேலை.. பட்ஜெட்டில் அறிவிப்பு.. லிஸ்டில் உங்க ஊர் இருக்கா!
9 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணிகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Feb 2026 13:56 PM IST

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாடு பரவலான வளர்ச்சி பெறுவதை தமிழக அரசு உறுதி செய்து வருகிறது. ஆண்டுதோறும் 2.5 லட்சம் கோடிக்கு அதிகமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியுடன், மாநிலம் முழுவதும் பல லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வரும் துறையாக தகவல் தொழில்நுட்ப துறை விளங்கி வருகிறது. 250- க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வரும் சென்னையில் இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றான உருவெடுத்துள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களும் இந்த வளர்ச்சி விகிதத்துக்கு அதிகமாக பங்களித்துள்ளன.

ரூ.1070 கோடியில் நியோ டைடல் பூங்காக்கள்

மத்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2024-25 ஆம் ஆண்டின் தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பம் ஏற்றுமதி பதிவாகியுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ரூ.1070 கோடியில் திருச்சி, ஓசூர், மதுரை ஆகிய நகரங்களில் புதிய டைட்டில் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு!

ரூ.388 கோடியில் 9 இடங்களில் டைடல் பூங்காக்கள்

இதே போல, விழுப்புரம் தஞ்சாவூர் சேலம் தூத்துக்குடி வேலூர் காரைக்குடி திருப்பூர் ஆகிய ஏழு இடங்களில் லியோ டைட்டில் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் திருவண்ணாமலை விருதுநகர் திருநெல்வேலி கன்னியாகுமரி ஈரோடு நாகப்பட்டினம் கரூர் புதுக்கோட்டை ஆகிய 9 இடங்களில் நியோ டைட்டில் பூங்காக்கள் ரூபாய் 388 கோடியில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நியோ டைட்டில் பூங்காக்கள் மூலம் சுமார் 25 ஆயிரத்து 500 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செமி கண்டக்டர் இயக்கத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

செமி கண்டக்டர் இயக்கத்துக்கு ஐந்து ஆண்டு செயல்திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.1018 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளை நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் வழங்கும் ஆதாரங்களை பெருக்கிடும் வகையில், சென்னைக்கு அருகே திருப்போரூரில் உப வடிநீர் பகுதியில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் 2.2 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மாமல்லன் நீர்த் தேக்கம் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: கலைஞர் கனவு இல்லம்.. கூடுதலாக 1 லட்சம் வீடுகள்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்