AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு… இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!

Tamil Nadu Higher Education Department: தமிழக உயர் கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் மூலம் உயர்கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை விரைந்து செயல்படுத்தப்படும்.

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு… இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு!
உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Feb 2026 11:11 AM IST

தமிழக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ( பிப்ரவரி 17) காலை தொடங்கியது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கான முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அதன்படி, இந்த கூட்டத்தொடரில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு

அப்போது, அவர் மாணவர்கள் உயர் கல்வி வரை இடைநிலை இல்லாமல் கல்வி பயில தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உயர் கல்வித் துறைக்கு ரூ8, 505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் கல்வித் துறையில் பல்வேறு நலத் திட்டங்கள் ஆகியவை விரைந்து செயல்படுத்தப்படும்.

11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்

மேலும், 11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 6,75,888 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. 2171 கோடி ரூபாயில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தில் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்

அரசு பள்ளிகளை மேம்படுத்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக திருச்சி, நெல்லை, கோவை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்ட மூலம் 19. 34 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதே போல, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுவதுடன், மாணவ, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக அமையும்.