AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Interim Budget Reaction: இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்… பட்ஜெட்டை குறிப்பிட்டு அவர் கூறிய வார்த்தை!

Tamil Nadu Interim Budget Reaction: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலமாகவும், மேனா மினுக்கியான உரையாக இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .

Tamil Nadu Interim Budget Reaction: இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்… பட்ஜெட்டை குறிப்பிட்டு அவர் கூறிய வார்த்தை!
இடைக்கால பட்ஜெட் குறித்து எடப்பாடி விமர்சனம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Feb 2026 13:52 PM IST

Tamil Nadu Interim Budget 2026 Reaction: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இடைக்கால பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4.5 ஆண்டு காலமாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 504 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக கூறிவிட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதே போல, சத்துணவு ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு வாக்குறுதிகள் அளித்துவிட்டு அதனை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

மேனா மினுக்கியான பட்ஜெட்

இதனால், ஏமாற்றம் அடைந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழகமே போராட்டக் களமாக மாறி உள்ளது. இதேபோல, தற்போது தாக்கல் செய்யப்பட்ட இடைநிலை நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, மேனா மினுக்கி உரையாக உள்ளது. இதில், உருப்படியாக எந்த அறிவிப்பும் இல்லை. 2025-2026 நிதிநிலை அறிக்கையில் வருவாய் 2.58 லட்சம் கோடியாக எதிர்பார்த்த நிலையில் திருத்திய மதிப்பீட்டின்படி மாநிலத்தின் சொந்த வருவாய் 2.38 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதில், சுமார் 26 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. மத்திய அமைச்சர் மீது குற்றம் சுமத்தும் நிதி அமைச்சர் தமிழகத்தின் வருவாய் குறைந்தது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மேலும் படிக்க: காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கே.சி வேணுகோபால் தலைமையில் முக்கிய ஆலோசனை..

நிதியமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை

தமிழகத்தின் வரவு செலவு 2025- 2026 ஆம் ஆண்டு ரூ.66,853 கோடி செலவிடப்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில் திருத்திய மதிப்பீட்டில் தற்போது வரை ரூ. 51,442 கோடியாக குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவிக்கவில்லை. நிதி பற்றாக்குறை ரூ.95 ஆயிரம் கோடி என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1.5 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மீது கூடுதல் வரி சுமை விதிக்கப்படும்.

5 மணி நேர உரையில் வரவு-செலவு பற்றிய விளக்கமில்லை

இது மாநில வளர்ச்சிக்கு உகந்தது கிடையாது. திமுக ஆட்சியில் நிதி நிலையை சரி செய்வதற்காக நிபுணர் குழு அமைத்த பிறகு கூறுதல் கடன் வாங்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கை, அரசு நிதி நிலை அறிக்கை குறித்து இரு அமைச்சர்களும் சுமார் 5 மணி நேரம் ஒரே நிகழ் தீயதை தவிர, வரவு, செலவு திட்டத்தை பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மேலும் படிக்க: Tamil Nadu Interim Budget Analysis 2026-27: தமிழக அரசின் கடன் சுமை ரூ.10.61 லட்சம் கோடியாக உயர்வு.. முழு நிதிநிலை விவரம்!!