AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இடைக்கால பட்ஜெட்… எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு… முழு விவரம் இதோ!

Tamil Nadu Interim Budget : தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த அரசு துறைகளுக்கு எவ்வளவு நிதியை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒதுக்கீடு செய்துள்ளார் என்பது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

இடைக்கால பட்ஜெட்… எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு… முழு விவரம் இதோ!
இடைக்கால பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 17 Feb 2026 14:11 PM IST

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9:30 மணியளவில் தொடங்கியது. கூட்டத் தொடரை சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு தமிழக அரசின் இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை தெரிவித்தார். அதன்படி, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: மகளிர் விடியல் பேருந்து பயணம்..ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… தங்கம் தென்னரசின் தங்கமான அறிவிப்பு!

  • ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ. 28, 687 கோடி.
  • உயர் கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 48 ஆயிரம் கோடி
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்திற்கு ரூ.1884 கோடி.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 28,821 கோடி.
  • தமிழ்நாடு செமி கண்டக்டர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 500 கோடி.
  • சிறு, குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறைக்கு ரூ. 1943 கோடி.
  • தொழில் துறைக்கு ரூ. 4882 கோடி ஒதுக்கீடு.
  • எரிசக்தி துறைக்கு ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு.
  • நீர்வளத் துறைக்கு ரூ. 4882 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு மின் துறைக்கு ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ. 219 கோடி ஒதுக்கீடு.
  • போக்குவரத்து துறைக்கு ரூ. 13,062 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி- கதர் துறைக்கு ரூ. 1943 கோடி ஒதுக்கீடு.
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.7547 கோடி ஒதுக்கீடு.
  • பொதுப் பணித் துறைக்கு ரூ. 1694 கோடி ஒதுக்கீடு.
  • அரசு அலுவலர்கள் நலன் திட்டத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு ரூ.15,111 கோடி ஒதுக்கீடு.

என தமிழக அரசில் உள்ள மேற்கண்ட துறைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்புகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்தில உள்ள துறைகள் வளர்ச்சி அடைவதுடன், அது சார்ந்த திட்டங்கள் விரைவாக அறிவிக்கப்பட்டு மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Tamil Nadu Interim Budget Reaction: இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்… பட்ஜெட்டை குறிப்பிட்டு அவர் கூறிய வார்த்தை!

Follow Us