AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2.22 மணி நேரம் பட்ஜெட் உரை வாசித்த தங்கம் தென்னரசு…

TN Interim budget 2026: இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக பகல் 11.52 மணிக்கு வாசித்து முடித்தார். இதைத்தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார். கடந்த ஆண்டு மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2.22 மணி நேரம் பட்ஜெட் உரை வாசித்த தங்கம் தென்னரசு…
தங்கம் தென்னரசு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Feb 2026 15:11 PM IST

சென்னை, பிப்ரவரி 17: தமிழக சட்டசபையில் இன்று காலை 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சரியாக காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சரியாக பகல் 11.52 மணிக்கு உரையை நிறைவு செய்தார் அதன்படி, பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 22 நிமிடம் வரை அவர் வாசித்துள்ளார். இதுவே, கடந்த ஆண்டுக்கான (2025-25) பட்ஜெட் உரையை அவர், 2 மணி நேரம் 38 மணி நேரம் வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திருக்குறளை மேற்கோள் காட்டிய அமைச்சர்:

காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கினை சொல்லி எனது உரையை தொடங்குகிறேன் என தங்கம் தென்னரசு தெரிவித்தார். “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”, இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை. வள்ளுவரின் வாக்கினைப் பின்பற்றி நானிலம் போற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்தின் வளர்ச்சி வழிநடத்தப்பட்டு வருகிறது என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து வருகிறார். கடந்த ஆண்டு மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us