AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: தோல்வியை தவிர்க்குமா இந்தியா..? இங்கிலாந்து எதிரான 3வது டி20 போட்டி எப்போது?

IND vs ENG 3rd T20 Date, Time: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20ஐ போட்டி, லங்காஷயரில் உள்ள வெஸ்ட் பிரிட்ஜ்ஃபோர்டில் அமைந்துள்ள டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 4 டி20ஐ போட்டிகளில் விளையாடி, 2ல் வெற்றியும் 2ல் தோல்வியும் கண்டுள்ளது.

IND vs ENG: தோல்வியை தவிர்க்குமா இந்தியா..? இங்கிலாந்து எதிரான 3வது டி20 போட்டி எப்போது?
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Jul 2026 14:33 PM IST

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து இந்தியாவை (Indian Cricket Team) வீழ்த்தியது. இதன் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இப்போது, ​​தொடரை வெல்லும் நம்பிக்கையைத் தக்கவைக்க வேண்டுமென்றால், ஷ்ரேயாஸ் ஐயரும் அவரது அணியும் அடுத்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும். 3வது டி20 போட்டி எப்போது, ​​எங்கு நடைபெறும் மற்றும் அது எத்தனை மணிக்குத் தொடங்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

ALSO READ: பெத்தேலின் பேயாட்டம்.. மீண்டும் தோல்வியை தொட்ட இந்தியா.. வெற்றி பாதையில் இங்கிலாந்து!

நேற்று அதாவது 2026 ஜூலை 4ம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடி அறிமுகமாகியுள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் வசம் இருந்த சாதனையை முறியடித்து, இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். தனது முதல் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வைபவ் இடம்பெற்று, மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி எப்போது?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20ஐ போட்டி வருகின்ற 2026 ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி எங்கே நடைபெறுகிறது?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20ஐ போட்டி, லங்காஷயரில் உள்ள வெஸ்ட் பிரிட்ஜ்ஃபோர்டில் அமைந்துள்ள டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 4 டி20ஐ போட்டிகளில் விளையாடி, 2ல் வெற்றியும் 2ல் தோல்வியும் கண்டுள்ளது. 2022-ல் இந்த ஸ்டேடியத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி இந்தியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி எத்தனை மணிக்குத் தொடங்கும்?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20ஐ போட்டி இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்குத் தொடங்கும். டாஸ் இரவு 9:30 மணிக்கு நடைபெறும். போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கும்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியை எந்த சேனல் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நடைபெறும்.

ALSO READ: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்.. இந்திய அணியின் தோல்விக்கு இந்த 5 தவறுகளே காரணம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியின் நேரலை எந்த ஆப்பில் ஒளிபரப்பப்படும்?

இந்தியாவில், இந்தப் போட்டி சோனி லிவ் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

Follow Us