AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: முதல் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே.. முக்கிய 3 சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Sooryavanshi Record: சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிக இளம் வயது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் தனது முதல் போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பு, இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார்.

Team India: முதல் போட்டியில் 14 ரன்கள் மட்டுமே.. முக்கிய 3 சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
வைபவ் சூர்யவன்ஷிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jul 2026 20:51 PM IST

வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) இன்று அதாவது 2026 ஜூலை 4 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இந்த போட்டியில் சூர்யவன்ஷி தனது ஷார்ட் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களை அடித்து, 10 பந்துகளில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக (Indian Cricket Team) வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, சூர்யவன்ஷி, வில் ஜாக்ஸின் பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் கைகளால் ஸ்டம்பிங் மூலம் அவுட்டானார்.

ALSO READ: 3 போட்டிகள்.. 16 வீரர்கள்! ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு! முதல் போட்டி எப்போது?

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் பல காரணங்களுக்காக இந்த ஆட்டம் வைபவ் சூர்யவன்ஷிக்கு மறக்க முடியாததாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஜோஃப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்டபோது, ​​வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகப்பெரிய சிக்ஸரை அடித்தார். வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேசப் போட்டியில் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும், 3 முக்கிய சாதனைகளைப் படைத்தார்.

சிக்ஸர் அடித்த இளம் வீரர்

வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் தனது முதல் 3 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் தனது இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்த இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அறிமுகமான இளம் இந்தியர்:


சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிக இளம் வயது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி தனது 15 வயது மற்றும் 99 நாட்களில் தனது முதல் போட்டியில் விளையாடினார். இதற்கு முன்பு, இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்தார். வைபவ் சூர்யவன்ஷி கடந்த 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார்.

ALSO READ: அறிமுகமாகும் 15 வயதான சூர்யவன்ஷி – சச்சினின் சாதனைக்கு முற்றுப்புள்ளி

முதல் போட்டியில் அரைசத பார்ட்னர்ஷிப்:

வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் சர்வதேசப் போட்டியிலேயே அரைசதக் கூட்டணி அமைத்து சாதனை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், வைபவ் சூர்யவன்ஷியும் அபிஷேக் சர்மாவும் 29 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர்.

Follow Us