IndvsEng : இந்திய அணியில் செய்யப்படும் 3 முக்கிய மாற்றங்கள் – வைபவ் இணைவாரா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 3 முக்கிய மாற்றங்கள் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று முக்கிய மாற்றங்கள் மூலம் இங்கிலாந்து அணிக்குக் கடும் சவாலை அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் பல முக்கிய மாற்றங்கள் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 2வது போட்டியில் வலிமையான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகம் குறித்து கடந்த சில நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அயர்லாந்து சுற்றுப்பயணம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியின் போது, பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் இருந்தது குறித்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையும் படிக்க : IND vs ENG: பொறுமையை இழந்த பிசிசிஐ.. இந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கம்!




குறிப்பாக வைபவ் நீண்ட காலம் விளையாட விடாமல் வைத்திருப்பது அவர் மீதான மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்று சுனில் கவாஸ்கர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் சேர்க்கப்படுவது ஏறக்குறைய உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பது மட்டுமல்லாமல், அவரை துவக்க ஆட்டக்காரராக களமிறக்குவது தொடர்பாக பயிற்சியாளரும் கேப்டனும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிரடியாக ஆடிவரும் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வைபவ் இன்னிங்ஸைத் தொடங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
இந்த மாற்றம் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தற்போதைய துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனை 3வது இடத்திற்கு மாற்றவும், தற்போது மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் இஷான் கிஷனை மிடில் ஆர்டருக்கு மாற்றவும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிர்ச்சி தரும் விஷயமாக திலக் வர்மாவுக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!
பேட்டிங் வரிசை மட்டுமல்லாமல், பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முந்தைய போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி அல்லது ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மான்செஸ்டர் மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு பேட்டிங்கிலும் கைகொடுக்கக்கூடிய ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை களமிறக்க இந்திய அணி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த மூன்று முக்கிய மாற்றங்கள் மூலம் இங்கிலாந்து அணிக்குக் கடும் சவாலை அளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.