AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG : சஞ்சு சாம்சனுக்கு கடும் நெருக்கடி… சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜூலை 4, 2026 நாளை மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. தொடர்ந்து அவர் சொதப்பி வருவது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

IND vs ENG : சஞ்சு சாம்சனுக்கு கடும் நெருக்கடி… சூர்யவன்ஷி வாய்ப்பு கிடைக்குமா?
சஞ்சு சாம்சன் - வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Jul 2026 16:45 PM IST

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி ஜூலை 4, 2026 நாளை மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் சஞ்சு சாம்சன் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. தொடர்ந்து அவர் சொதப்பி வருவது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு அதிகரிக்கும் அழுத்தம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 7 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். மேலும் டி20 போட்டிகளுக்கு ஏற்ப அவர் அதிரடியாக ஆட முயற்சிக்கவில்லை எனவும் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உறுவெடுத்த அவர், தற்போது தொடர்ந்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தடுமாறிவருகிறார்.

இதையும் படிக்க : IND vs SL: 13 நாட்களில் 2 டெஸ்ட் போட்டிகள்.. இலங்கை செல்லும் இந்திய அணி.. டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

மேலும் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆதிக்கம் காரணமாக, சஞ்சு சாம்சனுக்கான இடம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது வரை சூர்யவன்ஷியை களமிறக்குவதில் இந்திய அணி பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பும்பட்சத்தில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஒருபக்கம் சஞ்சு சாம்சன் சொதப்பினாலும், மற்றொரு பக்கம் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா சமீபத்திய போட்டிகளில் 49 மற்றும் 59 என தொடர்ச்சியாக ரன்கள் எடுத்து நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். இதனால் அவர் தனது இடத்தை உறுதி செய்துள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து தடுமாறி வருகிறார். குறிப்பாக பந்துஸ்விங் அல்லது சீம் ஆகும் சூழலில் அதனை எதிர்கொள்ள அவர் தடுமாறி வருகிறார்.

இதையும் படிக்க : IND vs ENG: இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குத் தயாரான விராட் கோலி.. வைரலாகும் வீடியோ க்ளிப்!

திலக் வர்மாவுக்கும் பாதிப்பு?

சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல், திலக் வர்மாவின் ஆட்டமும் தற்போது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறிப்பாக ஸ்பின்னர்களு்கு எதிராக அவர் ரன்கள் அடிக்காமல் தடுமாறுவதாக கூறப்படுகிறது. இந்த 2026 ஆம் ஆண்டில் அவர் விளையாடிய 12 போட்டிகளில் அவர் வெறும் 12 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரை சிறந்த ஃபினிஷராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சொதப்பி வருவது அவரது இடத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Follow Us