IND vs ENG: இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குத் தயாரான விராட் கோலி.. வைரலாகும் வீடியோ க்ளிப்!
IND vs ENG ODI Series: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலியை பிசிசிஐ சேர்த்துள்ளது, ஆனால் அவரது பங்கேற்பு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது. வருகின்ற 2026 ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 'கிங் கோலி' களமிறங்குவார் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு (IND vs ENG) எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது, அவரது உடற்தகுதியைப் பொறுத்தே அமையும். மோசமான உடற்தகுதி காரணமாக இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னதாக, விராட் கோலி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கருடன் பயிற்சி செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ மூலம், வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: சூர்யவன்ஷி உள்ளே.. யார் வெளியே? இங்கிலாந்து எதிரான முதல் டி20.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி?




தீவிர பயிற்சியில் விராட் கோலி:
#BREAKING
Virat Kohli practices with Sanjay Banger at Alibaug ahead of ODI series against England. pic.twitter.com/1pz6kWqyvy— NEWS WALA (@NEWSWALApy) July 2, 2026
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14 முதல் 19 வரை நடைபெறும். கிடைத்த தகவலின்படி, விராட் கோலி அலிபாகில் சஞ்சய் பங்கருடன் தீவிரமாகப் பயிற்சி செய்துள்ளார். பங்கரின் உதவியுடன் கோலி தனது பேட்டிங் நுட்பத்தை மேம்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வைரலான அந்த வீடியோவில், விராட் தனது விளையாட்டு உபகரணப் பெட்டியைத் தோளில் மாட்டிக்கொண்டு செல்வதும், இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொண்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலியை பிசிசிஐ சேர்த்துள்ளது, ஆனால் அவரது பங்கேற்பு அவரது உடற்தகுதியைப் பொறுத்தது. வருகின்ற 2026 ஜூலை 14 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ‘கிங் கோலி’ களமிறங்குவார் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
விராட் கோலியின் கடைசி சர்வதேச போட்டி எப்போது?
விராட் கோலி கடைசியாக இந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை அடித்தார். அந்தப் போட்டியில் கோலி 124 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்ட் போட்டி! பேட்டிங்கில் உலக சாதனை படைத்த பும்ரா!
விராட் கடந்த இரண்டு ஒருநாள் தொடர்களில் 542 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது கடைசி 6 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையும் 2 அரைசதங்களையும் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி 2026 ஜூலை 16ம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 2026 ஜூலை 19ம் தேதியும் நடைபெறுகின்றன.