On This Day in 2022: 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்ட் போட்டி! பேட்டிங்கில் உலக சாதனை படைத்த பும்ரா!
Jasprit Bumrah World Record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை ஜஸ்பிரித் பும்ரா வசம் உள்ளது. சரியாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது 2022ம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி, இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை பும்ரா படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) என்பது பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் என அனைவரின் உடல் மற்றும் மன வலிமையை சோதிப்பதாலே அது டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த வடிவம் பார்வையாளர்களையும் உண்மையாகவே சோதிக்கிறது. 5 நாள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில், விக்கெட்டுகளை எடுக்க நேரம் முக்கியமானது என்பதால், பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ரன்களைக் குவிப்பதோடு, கிரீஸில் நீண்ட நேரம் நின்று விளையாட போராடுவார்கள். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் கொடுத்த ஓவரைப் பார்க்கும்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு பேட்ஸ்மேனாகத் தனித்து நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுவும் இந்த சாதனை 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் படைக்கப்பட்டது.
ALSO READ: எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர் பதவி.. புஜாராவுக்கு மிகப்பெரிய மரியாதை!
ஒரே ஓவரில் அதிக ரன்கள்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை ஜஸ்பிரித் பும்ரா வசம் உள்ளது. சரியாக 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதாவது 2022ம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி, இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை பும்ரா படைத்தார்.




பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் முதல் செஷனில், இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது பும்ரா, ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரை எதிர்கொண்டார். அப்போது, யாரும் எதிர்பார்க்கபோது பிராட்டின் ஓவரில் பும்ரா 35 ரன்களை குவித்தார். அதன்படி, இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்களை எடுத்த ஓவராக அமைந்தது.
5 பவுண்டரிகள்.. 2 சிக்ஸர்கள்..
பும்ரா அந்த ஓவரில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்து 32 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் மீதமுள்ள பந்துகளில் ஒரு வைடு மற்றும் ஒரு நோ-பால் மூலம் ரன்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு சிங்கிள் எடுக்கப்பட்டதால், அந்த ஓவரில் 35 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்தப் போட்டியில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ஃபிஃபா வரலாற்றிலேயே கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட அதிக கோல்கள்.. சாதித்த பெல்ஜியம்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த 10 ஓவர்கள்
ஸ்டூவர்ட் பிராட் – 35 ( ஜஸ்பிரித் பும்ரா )
ராபின் பீட்டர்சன் – 28 (பிரையன் லாரா)
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 28 (ஜார்ஜ் பெய்லி)
ஜோ ரூட் – 28 (கேசவ் மகாராஜ்)
ஹர்பஜன் சிங் – 27 ரன்கள் (ஷாஹித் அஃப்ரிடி)
ஜாஹித் மஹ்மூத் – 27 ரன்கள் (ஹாரி புரூக்)
யூனிஸ் கான் – 26 (கிரேக் மெக்மில்லன்)
டேனிஷ் கனெரியா – 26 (பிரையன் லாரா)
பால் ஹாரிஸ் – 26 (மிட்செல் ஜான்சன்)
சுரங்கா லக்மல் – 26 (பிரெண்டன் மெக்கல்லம்)