ICC Ranking: டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து பவுலர் நம்பர் 1.. 36 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..!
ICC Test Ranking: 36 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஒரு நியூசிலாந்து பந்துவீச்சாளர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மாட் ஹென்றி முதலிடத்தை அடைந்துள்ளார். இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய 3வது நியூசிலாந்து டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஹென்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 1947-ல் ஜாக் கோவியும், பின்னர் 1984 முதல் 1990 வரை ரிச்சர்ட் ஹேட்லியும் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது சமீபத்திய தரவரிசையை இன்று அதாவது 2026 ஜூன் 24ம் தேதி வெளியிட்டது. இந்த தரவரிசையுடன் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது. இந்திய அணியின் (Indian Cricket Team) வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டியுள்ளனர். மாட் ஹென்றி 6 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், பும்ராவின் தரவரிசை மாறாமல் உள்ளது. மேலும், இஷான் கிஷன் ஒருநாள் தரவரிசையில் 21 இடங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார். இது மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் விக்கெட் மழை.. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்த பிடித்த ஸ்ரீ சரணி!




36 வருட சாதனை முறியடிப்பு:
A new challenger for Jasprit Bumrah at the top of the Test bowling charts as an England veteran regains his place as the No.1 batter on a big update to the ICC Men’s Test Player Rankings 😲
Details 👇https://t.co/fFeN55q1dp
— ICC (@ICC) June 24, 2026
36 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஒரு நியூசிலாந்து பந்துவீச்சாளர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மாட் ஹென்றி முதலிடத்தை அடைந்துள்ளார். இதன்மூலம், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை எட்டிய 3வது நியூசிலாந்து டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஹென்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 1947-ல் ஜாக் கோவியும், பின்னர் 1984 முதல் 1990 வரை ரிச்சர்ட் ஹேட்லியும் முதலிடத்தைப் பிடித்திருந்தனர். தற்போது, ஹென்றி 3வது வீரராக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
ஜோ ரூட் மீண்டும் முதலிடம்:
நியூசிலாந்துக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரூட்டின் மதிப்பீடு புள்ளிகள் 871 ஆகும். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 866 மதிப்பீட்டுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ALSO READ: நம்பர் 1 இடத்தைப் பிடிக்க சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு.. சாதனை படைப்பாரா..?
ஐசிசி ஒருநாள் தரவரிசை:
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பேட் செய்த இஷான் கிஷன், ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி 43வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மதிப்பீடு 516 ஆகும். ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையிலும் சுப்மன் கில் முன்னேற்றம் கண்டுள்ளார். சுப்மன் கில் 3 இடங்கள் முன்னேறி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். கில்லின் மதிப்பீடு 791 ஆகும். இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 815 மதிப்பீட்டுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கில் எப்போது முதலிடத்தை எட்டுவார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.