ICC T20 Bowling Ranking: டி20 உலகக் கோப்பையில் விக்கெட் மழை.. ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்த பிடித்த ஸ்ரீ சரணி!
Shree Charani No.1 ranked ICC T20I bowler: ஸ்ரீ சரணியின் இதுவரையிலான 2026 டி20 மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் பேட்டிங் வரிசையில் விக்கெட் மழை பொழிந்து, வெறும் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியாவின் (Indian Womens Cricket Team) நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, உலகின் நம்பர் 1 டி20 பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) அவரது சிறப்பான ஆட்டம், தரவரிசையில் ஸ்ரீ சரணி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதுவரை நடந்த 2026 டி20 மகளிர் உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரீ சரணி, தற்போது இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். ஒரு வருடத்திற்கு முன்புதான் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான 21 வயதான ஸ்ரீ சரணியின் இந்தச் சாதனை நம்பமுடியாதது. கடந்த 13-14 மாதங்களில், ஸ்ரீ சரணி இந்திய அணியின் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இதன்மூலம், ஸ்ரீ சரணி இங்கிலாந்தின் லின்சி ஸ்மித்தை முந்திச் சென்றுள்ளார், இதன் காரணமாக லின்சி ஸ்மித் தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கி 3வது இடத்திற்கு வந்துள்ளார்.




ஸ்ரீ சரணி டி20யில் நம்பர் 1 இடம்:
The rise to the 🔝 is complete 💥
Sree Charani becomes the new No.1 ranked T20I bowler 😍
More ➡️ https://t.co/DnIQiTQLPq pic.twitter.com/YpbdyI5rD9
— ICC (@ICC) June 23, 2026
ஸ்ரீ சரணி 753 தரவரிசைப் புள்ளிகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள சார்லி டீன் 733 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். சரணியைத் தவிர, தீப்தி ஷர்மா மட்டுமே முதல் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் உள்ளார். டி20 பந்துவீச்சுத் தரவரிசையில் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து, 8-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஸ்ரீ சரணியின் இதுவரையிலான 2026 டி20 மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் பேட்டிங் வரிசையில் விக்கெட் மழை பொழிந்து, வெறும் 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தோற்றபோதிலும், ஸ்ரீ சரணி அந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ALSO READ: அதிர்ஷ்ட காற்று இந்திய அணி பக்கமா..? இது நடந்ததால் ஹர்மன் படை கோப்பையை வெல்லும்!
டி20 பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை, ஷஃபாலி வர்மா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் ஸ்மிருதி மந்தனா தனது 5வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் ஒரு இடம் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.