AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Guidelines: தாய் ஆன பிறகு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அணிக்குள் வர போராட்டமா? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!

ICC Post-Pregnancy Guidelines: மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் கர்ப்பகாலம் மற்றும் மீண்டும் விளையாடத் திரும்பும் பயணத்தின்போது, ​​வழக்கு மேலாளர் முதல் தொடர்புப் புள்ளியாகச் செயல்பட வேண்டும். மேலும், வீராங்கனை பற்றிய மிகவும் சமீபத்திய தகவல்கள் அவரிடம் இருப்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும்.

ICC Guidelines: தாய் ஆன பிறகு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் அணிக்குள் வர போராட்டமா? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!
ஐசிசி வழிகாட்டு நெறிமுறைகள்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Jun 2026 20:41 PM IST

இங்கிலாந்தில் தற்போது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை (ICC Womens Cricket t20 World Cup) போட்டி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 போட்டிகள் என மொத்தம் 12 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக தீவிரமாக மோதி வருகிறது. இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் தாய்மார்களான பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு எப்படித் திரும்புவது மற்றும் அவர்களது நாட்டின் கிரிக்கெட் வாரியங்களின் பொறுப்புகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஐசிசி (ICC) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

ALSO READ: வெளியேறும் அபாயத்தில் இந்திய மகளிர் அணி.. அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

மகளிர் வீராங்கனை அணிக்கு திரும்புவது எப்படி..?


கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவது தொடர்பாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வழிகாட்டுதல்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. குழந்தை பெற்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்பும் வீராங்கனைகளுக்கு இந்த ஐசிசி வழிகாட்டுதல்கள் உதவும்.

பெண்கள் ஆரோக்கியம் தொடர்பான பல முன்னெடுப்புகளை உள்ளடக்கிய ‘100% கிரிக்கெட்’ பிரச்சாரத்தை ஐசிசி தொடங்கியுள்ளது. இது, இவ்விஷயம் குறித்து மகளிர் வீராங்கனைகள் மற்றும் ஊழியர்களுக்குக் கல்வி புகட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட வரும் வீராங்கனைகளுக்காக ஒரு சிறப்பு வழக்கு மேலாளரை நியமிக்குமாறு வாரியத்திற்கு ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

இந்த செயல்பாடு எதற்காக..?

விளையாட்டு வீராங்கனையின் கர்ப்பகாலம் மற்றும் மீண்டும் விளையாடத் திரும்பும் பயணத்தின்போது, ​​வழக்கு மேலாளர் முதல் தொடர்புப் புள்ளியாகச் செயல்பட வேண்டும். மேலும், வீராங்கனை பற்றிய மிகவும் சமீபத்திய தகவல்கள் அவரிடம் இருப்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும். மகளிர் வீராங்கனைகளுக்கு கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பிறகும் தரமான மருத்துவப் பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை வாரியம் வழங்க வேண்டும் என ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

ALSO READ: அதிர்ஷ்ட காற்று இந்திய அணி பக்கமா..? இது நடந்ததால் ஹர்மன் படை கோப்பையை வெல்லும்!

கர்ப்பத்திற்குப் பிறகு வீராங்கனைகள் பாதுகாப்பாகவும், நிலைத்தன்மையுடனும் மீண்டும் திரும்புவதை ஊக்குவிப்பதற்காக, ஐசிசி 6R கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

  • தயார் செய்தல் (Ready)
  • மறுஆய்வு (Review)
  • மீட்டெடுத்தல் (Restore)
  • சீரமைத்தல் (Recondition)
  • திரும்புதல் (Return) மற்றும் செம்மைப்படுத்துதல்

பிரசவத்திற்குப் பிறகு திரும்பும் வீராங்கனைகளுடன் சந்திப்புகள் நடத்தப்படும். இதில் மருத்துவப் பணியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், வலிமை மற்றும் உடற்பயிற்சிப் பயிற்சியாளர் மற்றும் உளவியலாளர் அடங்கிய முழு ஆதரவுக் குழுவும் இடம்பெறும்.

Follow Us