Womens T20 WC 2026: அதிர்ஷ்ட காற்று இந்திய அணி பக்கமா..? இது நடந்ததால் ஹர்மன் படை கோப்பையை வெல்லும்!
Indian Womens Cricket Team: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அதன் பிறகு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team), தென்னாப்பிரிக்காவிடம் தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், இந்தத் தோல்வி ரசிகர்களுக்குக் கவலைக்குரிய விஷயமாக இல்லாமல், நம்பிக்கையூட்டும் விஷயமாக அமைந்துள்ளது. இதுவரை, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த பிறகு இந்தியா உலக சாம்பியன் ஆகப்போவது ஒரு பெரும் தற்செயல் நிகழ்வாகும். 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது 3வது போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஒற்றைத் தோல்வி, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட சிக்கலுக்கு தள்ளியுள்ளது. இருப்பினும், மறுபுறம் பார்க்கும்போது, இது ஒரு தோல்வி அல்ல, மாறாக இந்தியாவிற்கான வெற்றியின் அறிகுறி என்றே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ALSO READ: டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்ப விருப்பமா..? கோலி கொடுத்த க்யூட் பதில்! எழுந்த சிரிப்பலை!




இது இந்திய அணிக்கு அதிர்ஷ்டமா..?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி எப்படி இந்தியாவிற்கு வெற்றியின் சின்னமாக மாறியது? இதைப்புரிந்துகொள்ள, நாம் கடந்த 2 உலகக் கோப்பைகளைப் பார்க்க வேண்டும். 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையைப் போலவே, அதிலும் இந்திய அணி தனது முதல் தோல்வியை தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்தது. இருப்பினும், இந்திய அணி கடந்த 2 உலகக் கோப்பைகளிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அதன் பிறகு, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது. அதன்பிறகு 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பை வந்தது. இந்த ஐசிசி தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவே அமைந்தது. இருப்பினும், சூர்யகுமார் யாதவின் தலைமையின் கீழ், இந்திய அணி கோப்பையை வென்றது.
ALSO READ: இனி இந்திய அணி எப்போது, யாரை எதிர்கொள்ளும்? ஜூன், ஜூலை மாதங்களுக்கான அட்டவணை!
தற்போது, 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையிலும் இதேதான் நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி, இத்தொடரில் இந்தியாவின் முதல் தோல்வியாகும். எனவே, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வேறு 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் மீண்டும் உலகக் கோப்பையை வென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.