AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND A vs SL A Final: சூர்யவன்ஷியின் புயல் ஆட்டம்.. இலங்கை ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி சாம்பியன்!

India A Champion: இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 

IND A vs SL A Final: சூர்யவன்ஷியின் புயல் ஆட்டம்.. இலங்கை ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி சாம்பியன்!
இந்திய ஏ அணி சாம்பியன்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 21 Jun 2026 19:03 PM IST

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ இடையிலான (IND A vs SL A) முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா ஏ-வின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) நாயகனாகத் திகழ்ந்தார். இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி ஒருதலைப்பட்சமாக அமைந்தது. முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய இலங்கை-ஏ அணியால் 311 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். இதுமட்டுமின்றி, பந்துவீச்சில் யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ALSO READ: 3 ஆண்டுகளுக்கு பிறகு! ஒருநாள் போட்டியில் காலடி வைக்கும் முக்கிய வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு!

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி:

இந்திய அணிக்காக, பிரியான்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி 8.5 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்தனர். பிரியான்ஷ் ஆர்யா 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 94 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், கேப்டன் திலக் வர்மா 90 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 67 ரன்கள் எடுத்தார். மேலும், குமார் குஷாக்ரா 36, சூர்யான்ஷ் ஷெட்ஜ் 2, நிஷாந்த் சிந்து 16, மற்றும் விப்ராஜ் நிகம் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியாக, அங்குல் ராய் வெறும் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். இதன்மூலம், இந்தியா ‘ஏ’ அணி 377 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது.

போராடிய இலங்கை:

பதிலுக்கு ஆடிய இலங்கை அணியால் 47.1 ஓவர்களில் 311 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நிரோஷன் டிக்வெல்லா (25), அவிஷ்கா பெர்னாண்டோ (03), நுவண்டு பெர்னாண்டோ (21), சதீரா சமரவிக்ரம (52), சஹான் அரச்சிங்க (38), ரவிந்து பெர்னாண்டோ (19), விஜயகாந்த் வியாஸ்காந்த் (39), முகமது ஷிராஸ் (21) மற்றும் துலாஜ் சமுதிதா (15) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இந்தியாவின் பிரம்மாண்டமான மொத்த ரன்களுக்கு முன்னால், இலங்கை அணி 47.1 ஓவர்களில் 311 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ALSO READ: பழிவாங்கிய சூர்யவன்ஷி.. 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து உலக சாதனை.. மிரட்டல் சம்பவம்!!

யஷ் தாக்கூர் இந்தியாவுக்காக 7 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விப்ராஜ் நிகம் 9.1 ஓவர்களில் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசோக் சர்மா 9 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதுதவிர, அனுகுல் ராய் 9 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், திலக் வர்மாவும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Follow Us