AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

World Cup 2027: உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிசிசிஐ செயலாளர் மழுப்பலான பதில்!

BCCI secretary Devajit Saikia: வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் பலமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இருவரும் தொடர்ந்து விளையாடுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

World Cup 2027: உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பிசிசிஐ செயலாளர் மழுப்பலான பதில்!
விராட் கோலி - ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Jun 2026 15:29 PM IST

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணிக்காக (Indian Cricket Team) களமிறங்குகின்றனர். ‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். அதே சமயம், விராட் கோலி காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். இரு வீரர்களும் ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர். அதேநேரத்தில், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலிக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்தக் கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா சற்று மழுப்பலான பதிலையே அளித்தார். அதில், இதுபோன்ற தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று சைகியா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?

பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறியது என்ன..?


பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, ”இந்திய அணி தொடர்ந்து மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தேர்வுக் குழு, கிரிக்கெட் குழு, வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களிடையே தொடர்ச்சியான உரையாடல் நடைபெறுகிறது. மேலும், எங்கள் அமைப்பு மிகவும் வலுவானது. இதில் ஏராளமான நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறினார்.

தொடர்ந்து, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்பது குறித்து தேவ்ஜித் சாய்கியாவிடம் கேட்கப்பட்டபோது, ​​அதற்கு பதிலளித்த சைகியா, ”இதுபோன்ற விஷயங்களை ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளியிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவை வியூக ரீதியான முடிவுகள், மேலும் இவை நிர்வாகக் குழுவிற்குள் விவாதிக்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

ALSO READ: பயிற்சியாளராக எம்.எஸ்.தோனி தான் தேவை… காம்பீரை மறைமுகமாக விமர்சித்த முன்னாள் வீரர்

உலகக் கோப்பையில் விளையாட விரும்பும் ரோஹித் – கோலி:

வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் பலமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளனர். 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இருவரும் தொடர்ந்து விளையாடுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் தற்போது வரை இதுகுறித்து மௌனம் காத்து வருகின்றனர். இந்த இரண்டு மூத்த வீரர்களும் 2027 உலகக் கோப்பையில் விளையாட முடியுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us