AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG 2nd ODI: வயது மாற்றத்தால் 2 ஆண்டுகள் தடை.. தளறாத மனம்.. இந்திய அணிக்கு அறிமுகமான பிரின்ஸ் யாதவ் பாதை!

Prince Yadav ODI Debut: 2019 டிசம்பரில், தனது வயதை மறைத்த வழக்கில் பிரின்ஸ் யாதவ் மீது பிசிசிஐ கடுமையான 2 ஆண்டுத் தடை விதித்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக, பிரின்ஸ் யாதவ் தனது பிறப்புச் சான்றிதழில் டிசம்பர் 12, 2001 என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், பிசிசிஐ அதை சிபிஎஸ்இ வாரியத்துடன் சரிபார்த்தபோது உண்மை வெளிவந்தது.

IND vs AFG 2nd ODI: வயது மாற்றத்தால் 2 ஆண்டுகள் தடை.. தளறாத மனம்.. இந்திய அணிக்கு அறிமுகமான பிரின்ஸ் யாதவ் பாதை!
பிரின்ஸ் யாதவ்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 17 Jun 2026 16:07 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (IND vs AFG) இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி லக்னோவில் உள்ள இக்கானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைத் தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அணி (Indian Cricket Team) களமிறங்கியுள்ளது. 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு லக்னோவில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணியில் ஒரு சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக பிரின்ஸ் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

ALSO READ: வெற்றியை நோக்கி இந்திய அணி.. போராடுமா ஆப்கானிஸ்தான்..? லக்னோ பிட்ச் யாருக்கு சாதகம்?

பிரின்ஸ் யாதவ் யார்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் முதல் போட்டியில் அறிமுகமானார்கள். அதே சமயம், பிரின்ஸ் யாதவ் இந்தியாவுக்காக தனது முதல் கேப்பை பெற்றுள்ளார். பிரின்ஸ் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்தார். இந்த ஆட்டத்தின் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தனது முதல் சர்வதேச வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

வயதை மறைத்த விவகாரத்தில் தடை:


2019 டிசம்பரில், தனது வயதை மறைத்த வழக்கில் பிரின்ஸ் யாதவ் மீது பிசிசிஐ கடுமையான 2 ஆண்டுத் தடை விதித்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக, பிரின்ஸ் யாதவ் தனது பிறப்புச் சான்றிதழில் டிசம்பர் 12, 2001 என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், பிசிசிஐ அதை சிபிஎஸ்இ வாரியத்துடன் சரிபார்த்தபோது உண்மை வெளிவந்தது. பிரின்ஸ் 2012-ஆம் ஆண்டிலேயே 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் அவரது உண்மையான பிறந்த தேதி ஜூன் 10, 1996 ஆகும். இந்த மோசடியின் காரணமாக, அவர் தடை செய்யப்பட்டார், மேலும் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், தடைக்காலம் முடிந்த பிறகும், பிரின்ஸ் மனம் தளரவில்லை. தொடர்ந்து, உள்ளூர் கிரிக்கெட்டிலும் டெல்லி பிரீமியர் லீக்கிலும் டெல்லி அணிக்காக ஒரு சிறப்பான மறுபிரவேசம் செய்தார். ஐபிஎல் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் அவர் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார்.

ALSO READ: தொடரை வெல்லுமா இந்தியா..? ஆப்கானிஸ்தான் எதிரான 2வது ஒருநாள் போட்டி எப்போது..?

விராட் கோலி ஆட்டமிழப்பால் கிடைத்த வாய்ப்பு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியை, பிரின்ஸ் யாதவ் வெறும் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்ட் செய்தார். பிரின்ஸ் யாதவ் வீசிய சுமார் 140.4 வேகத்திலான இன்ஸ்விங்கர் பந்தை விராட் கோலியால் கணிக்க முடியவில்லை. கோலி ஆட்டமிழந்ததை அவரே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். சுவாரஸ்யமாக, முன்னதாக ஒரு போட்டியின் போது பந்துவீசுவது குறித்து விராட் கோலி பிரின்ஸுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பிரின்ஸ் யாதவ், விராட் கோலிக்கு எதிராகப் பயன்படுத்தி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்த ஒற்றை விக்கெட், பிரின்ஸை ஒரே இரவில் இந்திய அணிக்கு அழைத்து சென்றது.

Follow Us