IND vs AFG: மீண்டும் ரோஹித் சர்மாவை ரன் அவுட்டாகிய கில்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?
Rohit Sharma Run Out: கடந்த 2024ம் ஆண்டு, ரோஹித் சர்மா டி20 அணியின் கேப்டனாக இருந்தபோது, மொஹாலியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டி நடந்துகொண்டிருந்தது. ரோஹித் சர்மா பந்தை மிட்-ஆஃப் திசையில் தள்ளிவிட்டு, நான்-ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி ஓடினார். ஆனால் சுப்மன் கில் தனது கிரீஸை விட்டு நகரவில்லை.
2026 ஜூன் 13ம் தேதியான நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி (Indian Cricket Team), 15 பந்துகளுக்கு முன்னதாகவே இலக்கை எட்டியது. கேப்டன் சுப்மன் கில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே போட்டியில், கில்லுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா ரன் அவுட் ஆனார். ஆட்டத்திற்குப் பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பியதும் ரோஹித் சர்மா (Rohit Sharma) கோபப்பட்டாரா என்று சுப்மன் கில்லிடம் கேட்கப்பட்டபோது, என்ன கூறினார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ALSO READ: சுப்மன் கில் ரன் வேட்டை.. தர்மசாலாவில் வெற்றியை தடம் பதித்த இந்தியா!
ரோஹித் ஷர்மா கோபமாக இருந்தாரா?
A painful moment for Rohit Sharma as he walked back after the run-out. 💔 pic.twitter.com/gtEG8MyguV
— manu (@manu18virat) June 13, 2026
ரோஹித் சர்மா ரன் அவுட் குறித்து சுப்மன் கில் கூறுகையில், ” ரோஹித் சர்மா மறு ஒளிபரப்பைப் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறினார். நாங்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோதும், டி20 போட்டியில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார்.” என்றார்.
ஒரே மாதிரி 2 முறை ரன் அவுட்:
This is Shubman Gill again. 😭💔
– The same way he got Rohit Sharma run out against Afghanistan earlier, he was involved in another run-out today. Looks like he still hasn’t learned from it. pic.twitter.com/AYDBJQHPED
— Captain Rohit Sharma Fan (@TheCaptainR45) June 13, 2026
கடந்த 2024ம் ஆண்டு, ரோஹித் சர்மா டி20 அணியின் கேப்டனாக இருந்தபோது, மொஹாலியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டி நடந்துகொண்டிருந்தது. ரோஹித் சர்மா பந்தை மிட்-ஆஃப் திசையில் தள்ளிவிட்டு, நான்-ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி ஓடினார். ஆனால் சுப்மன் கில் தனது கிரீஸை விட்டு நகரவில்லை. ரோஹித் ரன் அவுட் ஆனதும், அவர் கோபத்துடன் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா அபார வெற்றி:
தரம்சாலாவில் போட்டி மழையின் காரணமாக பல மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. கனமழையின் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 25 ஓவர்கள் என ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் சார்பில், ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிவேக ஒருநாள் சதத்தை 48 பந்துகளில் அடித்து வரலாறு படைத்தார். குர்பாஸின் சதம் ஆப்கானிஸ்தான் 194 ரன்களை எட்ட உதவியது. பதிலுக்கு இலக்கை துரத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இஷான் கிஷன் 34 ரன்களும், இறுதியில் களமிறங்கிய கே.எல். ராகுல் 19 பந்துகளில் அதிரடியாக 39 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.