IND vs AFG: சுப்மன் கில் ரன் வேட்டை.. தர்மசாலாவில் வெற்றியை தடம் பதித்த இந்தியா!
IND vs AFG 1st ODI Highlights: 25 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி 22.5 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டதால் போட்டியானது தலா 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸின் அதிவேக சதத்தின் உதவியுடன் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது. 25 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் அரைசதத்தின் உதவியுடன் இந்திய அணி (Indian Cricket Team) 22.5 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றது. அதே நேரத்தில் கே.எல். ராகுல் 19 பந்துகளில் அதிரடியாக 39 ரன்கள் எடுத்து, 13 பந்துகள் மீதமிருக்க இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா வெற்றி:
Sublime ball-striking 👌💥
🎥 Easy on the eye shots from Captain Shubman Gill and KL Rahul en route to a fine victory 👏
Updates ▶️ https://t.co/lCuohEZYAl #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @ShubmanGill | @klrahul pic.twitter.com/hXHuxGC5yL
— BCCI (@BCCI) June 13, 2026




ALSO READ: இந்திய அணிக்காக களம் கண்ட அறிமுக வீரர்கள்.. முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தல்!
குர்பாஸ் சதம்:
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அறிமுக வீரரான குர்னூர் பிராரிடம் கேட்ச் கொடுத்து, இரண்டாவது ஓவரில் இப்ராஹிம் ஜத்ரானை 1 ரன்னுக்கு இழந்ததால், ஆப்கானிதான் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. பின்னர் அர்ஷ்தீப் சிங், செடிகுல்லா அடல் (3) மற்றும் ரஹ்மத் ஷா (3) ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.
26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு இன்னிங்ஸைத் தொடங்கக் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். குர்பாஸ் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அதாவது, குர்பாஸ் தனது சதத்தை 48 பந்துகளில் எட்டினார்.
ALSO READ: 48 பந்துகளில் சதம்.. மிரட்டிய குர்பாஸ்.. இந்திய அணிக்கு 195 ரன்கள் மட்டுமே இலக்கு!
குர்பாஸ் ஆட்டமிழந்த பிறகு, இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக மீண்டு வந்து ஆப்கானிஸ்தானை 194 ரன்களுக்குள் சுருட்டினர். நிதிஷ் குமார் ரெட்டியின் சிறப்பான பந்துவீச்சில் குர்பாஸ் ஆட்டமிழந்தார். தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ஹர்ஷ் துபே, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய குர்னூர் பிரார், தனது முதல் சர்வதேசப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.