IND vs AFG: மழையால் தடைப்படும் IND vs AFG ஒருநாள் போட்டி.. 20 ஓவர்களாக நடத்தப்படுமா?
IND vs AFG 1st ODI: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), போட்டி நடைபெறும் நாளான இன்று அதாவது 2026 ஜூன் 13 அன்று தர்மசாலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்தது. இதனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் மழை பெய்யக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தர்மசாலா மைதானத்தின் வானிலை, அடிக்கடி மாறும் தன்மை கொண்டது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (IND vs AFG) இடையேயான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் இன்னும் போடைல்லை. தர்மசாலாவில் இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். இந்தியா (Indian Cricket Team) – ஆப்கானிஸ்தான் போட்டிக்கான குறைந்தபட்ச 20 ஓவர் ஆட்டத்திற்கான காலக்கெடு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள்!
இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி மதியம் 2:00 மணிக்கு ஓவர்கள் குறைக்கப்படத் தொடங்கின. குறைந்தது 20 ஓவர்கள் கொண்ட ஒரு போட்டிக்கான காலக்கெடு இந்திய நேரப்படி மாலை 6:32 மணி ஆகும். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், திட்டமிடப்பட்ட தொடக்க நேரத்திற்கு ஒரு மணி நேரம் கழித்து ஓவர்கள் பொதுவாகக் குறைக்கப்படும்.




தர்மசாலாவில் வானிலை எப்படி..?
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), போட்டி நடைபெறும் நாளான இன்று அதாவது 2026 ஜூன் 13 அன்று தர்மசாலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்தது. இதனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் மழை பெய்யக்கூடும் என்ற அச்சம் எழுந்தது. மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தர்மசாலா மைதானத்தின் வானிலை, அடிக்கடி மாறும் தன்மை கொண்டது. வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய முன்னறிவிப்பின்படி, 2026 ஜூன் 13ம் தேதியான இன்று அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், அக்யூவெதர் (AccuWeather) தகவலின்படி, பகல் நேரத்தில் 90% நேரம் மழை பெய்யும் என கூறப்பட்டு வந்தநிலையில், போட்டியின் போது மழையால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால், டாஸ் போடுவதில் தாமதம் மற்றும் ஓவர்களின் எண்ணிக்கையில் சாத்தியமான குறைப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது.
காயம் காரணமாக தொடர் முழுவதிலிருந்தும் விலக்கப்பட்டதால், விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருநாள் தொடரில், அவருக்குப் பதிலாக 3-வது இடத்தில் யார் களமிறங்குவார் என்ற கேள்வி நீடிக்கிறது.
ALSO READ: ஒருநாள் தொடரிலிருந்து விலகல்! டி20 தொடரில் அவுட்.. கேள்விக்குறியாகும் ஹர்திக் கிரிக்கெட் வாழ்க்கை!
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்,ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ்
ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா, இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், கஹல்ஜான்டி, நங்கேயாலியா, நங்கேலியா, தர்வீஷ் ரசூலி, ஃபரித் அஹ்மத் மாலிக், ஜியா உர் ரஹ்மான் ஷரிஃபி