AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திடீரென ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் – ரசிகர்கள் அதிர்ச்சி

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதசே கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நடுவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஓய்வை அறிவித்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் – ரசிகர்கள் அதிர்ச்சி
கேன் வில்லியம்சன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jun 2026 17:46 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதசே கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் நடுவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 35 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். கடந்த 16 ஆண்டுகளாக தனது தனித்துவமான பேட்டிங்காலும் சிறப்பான கேப்டன்சியாலும் அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்தார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு முக்கிய தூணாக விளங்கினார்.

110வது டெஸ்ட் போட்டி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே வில்லியம்சனின் கடைசி போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ரன்கள் எடுக்காத அவர், 2வது இன்னிங்ஸில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு அவருக்கு 485 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : IND vs AFG: காத்திருக்கும் 37 ஆண்டுகால சாதனை.. முறியடிக்கப்போகும் ரோஹித் சர்மா..!

வில்லியம்சனின் சர்வதேச சாதனைகள்

கேன் வில்லியம்சன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 19,346 ரன்களை குவித்துள்ளார். 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9,515 ரன்கள் அடித்துள்ளார். அதில் 54.06 சராசரி வைத்துள்ள அவர் 33 சதங்கள், 38 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை 175 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 7,256 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சங்கள் மற்றும் 47 அரை சதங்களுடன் 48.69 சராசரியை வைத்துள்ளார். சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை மொத்தமாக 93 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2,575 ரன்கள் குவித்துள்ளார். அதில் 18 அரை சதங்களும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 48 சதங்கள் அடித்துள்ளார். அதில் 6 இரட்டை சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்கக்கது.

இதையும் படிக்க : IND vs SL: 2 டெஸ்ட் போட்டிகள்! 3 டி20 போட்டிகள்.. இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி.. எப்போது தெரியுமா?

நியூசிலாந்து கேப்டனாக கேன் படைத்த சாதனைகள்

கடந்த 2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்கு 3 ஃபார்மெட்களிலும் கேப்டனாக இருந்த அவர் கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளைத் தேடி தந்துள்ளார். அவரது தலைமையில் 2 உலக கோப்பை ஃபைனல், 3 உலக கோப்பை செமி ஃபைனல், 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என நியூசிலாந்து அணி பல முக்கிய வெற்றிகளைப் பெற்றது.

ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட வில்லியம்சன், ஓய்வுபெறுவது குறித்து நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். ஆனால் கடந்த சில நாட்களாக இதுதான் சரியான நேரம் என்று தோன்றியது நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பெஸ்டை கொடுத்துள்ளேன் என்றார்.

Follow Us