Ben Stokes: நைட் க்ளப் பிரச்சனை.. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட ஸ்டோக்ஸ்..!
ENG vs NZ 2nd Test: வருகின்ற 2026 ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. நைட் க்ளப் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதால், ஸ்டோக்ஸ் மற்றும் சக வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.
நைட் க்ளப் சர்ச்சையைத் தொடர்ந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, அணியிலிருந்து வெளியேற்றியுள்ளது. இதை தொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் பதிலாக ஜோ ரூட் (Joe Root) இடைக்கால இங்கிலாந்து அணியின் (England Cricket Team) கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 2026 ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. நைட் க்ளப் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதால், ஸ்டோக்ஸ் மற்றும் சக வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ALSO READ: டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த ரூட்.. கில் டாப் 10க்குள் முன்னேற்றம்!
இந்த 2 அனுபவ வீரர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் வருகின்ற 2026 ஜூன் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
என்ன நடந்தது..?
Joe Root will lead the team as Interim Captain at the Kia Oval.
Click below for our 15-player squad for the 2nd Test 📝
— England Cricket (@englandcricket) June 10, 2026
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு, கடந்த 2026 ஜூன் 9ம் தேதி அதிகாலையில் ஒரு நைட் க்ளப்பில் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸும், கஸ் அட்கின்சனும் முழு போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, போதையில் இருந்த ஸ்டோக்ஸ் ரக்பி வீரர் டோடோவா அவ்வாவும் நைட் க்ளப்க்கு வெளியில் இருந்த தெருவில் வாக்குவாதம் முற்றி சண்டையிட்டு கொண்டதாக தெரிகிறது. ஸ்டோக்ஸ், டோடோவா அவ்வாவையும் அவரது தோழரையும் சில நிமிடங்களுக்குள் பலமுறை குத்தியதில், அவர்களில் ஒருவர் தரையில் விழுந்தார். இது தொடர்பாக வெளியான வீடியோவில் ஸ்டோக்ஸும் கஸ் அட்கின்சனும் ஒரு நைட் க்ளப்க்கு வெளியே தெருவில் சண்டையிட்டது தெரிந்தது.
ALSO READ: இரவு 11 மணிக்கு இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரா..? முக்கிய முடிவை எடுத்த கிரிக்கெட் வாரியம்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி
ஜோ ரூட் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், மேத்யூ ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்சன், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் டங்.


