AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: அதீத பணிச்சுமை.. முகமது சிராஜூக்கு ரெஸ்ட்.. பிரசித் கிருஷ்ணாவை அழைத்த இந்திய அணி!

Prasidh Krishna replaces Siraj: பணிச்சுமை மேலாண்மையின் ஒரு பகுதியாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20ஐ தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு முதல் டி20 போட்டியாகும்.

Team India: அதீத பணிச்சுமை.. முகமது சிராஜூக்கு ரெஸ்ட்.. பிரசித் கிருஷ்ணாவை அழைத்த இந்திய அணி!
முகமது சிராஜ் - பிரசித் கிருஷ்ணா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2026 16:08 PM IST

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணியை (Indian Cricket Team) வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, வருகின்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் டி20ஐ அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமை தாங்க இருக்கிறார். இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முகமது சிராஜுக்குப் பதிலாக தற்போது பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். பணிச்சுமை மேலாண்மையின் ஒரு பகுதியாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20ஐ தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் 3 பெரிய சவால்கள்!

ஆப்கானிஸ்தான் தொடர்:


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஏற்கனவே முடிந்துவிட்டது. இதன் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்ததாக விளையாடவுள்ளது. அடுத்ததாக, இந்திய அணி அயர்லாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இது முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும். இந்திய டி20 அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருக்கு முதல் டி20 போட்டியாகும்.

ALSO READ: முழு உடற்தகுதியுடன் ரோஹித் சர்மா.. ஆப்கானிஸ்தான் தொடரில் கெத்தாக களம்!

இந்திய டி20 அணி விவரம்:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி.

இருப்பினும், பணிச்சுமை மேலாண்மையின் ஒரு பகுதியாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடர்களில் இருந்து சிராஜுக்கு ஓய்வளிக்கப்படும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாகக் இந்ஹிய அணியில் சேர்க்கப்பட்டுள்ள பிரசித் கிருஷ்ணா, 5 டி20 போட்டிகளில் விளையாடி, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, 120 ரன்கள் எடுத்துள்ளார்.

Follow Us