Team India: இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கும் 3 பெரிய சவால்கள்!
Shreyas Iyer New T20I Captain: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. வயது கூடிக்கொண்டே போவதோடு, சூர்யகுமார் யாதவ் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்த 2 காரணிகளும் அவருக்குப் பாதகமாக இருப்பதால், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இந்திய அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) டி20 அணிக்கு விரைவில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக பதவி ஏற்க இருக்கிறார். பிசிசிஐ கூட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் பெயரை பிசிசிஐ ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. வயது கூடிக்கொண்டே போவதோடு, சூர்யகுமார் யாதவ் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்த 2 காரணிகளும் அவருக்குப் பாதகமாக இருப்பதால், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இந்திய அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பதவியேற்றதும் 3 சவால்கள் காத்திருக்கின்றன.
ALSO READ: சூர்யவன்ஷிக்கு அழைப்பு.. அயர்லாந்து, இங்கிலாந்து, ஆசிய போட்டிக்கான இந்திய டி20 அணியின் விவரம்!
தொடக்க வீரராக களமிறங்குவாரா வைபவ் சூர்யவன்ஷி..?
வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 சீசனில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து, சூர்யவன்ஷியின் வயதை கணக்கில் கொள்ளாமல் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் என மூன்று வீரர்கள் ஏற்கனவே உள்ளனர். தற்போது, வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவரை ஆடும் லெவனில் எங்கு விளையாட வைப்பது என்பதை முடிவு செய்வதே ஷ்ரேயாஸ் ஐயருக்கு சவாலாக இருக்கும்.




இந்தியாவின் முக்கிய வீரர்கள் தற்போது ஃபார்மில் இல்லை. ஐபிஎல் 2026 தொடரில் சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் செயல்பாடு மிகவும் சராசரியாக இருந்தது. இந்த வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வராவிட்டால், ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
ALSO READ: 15 வயதில் டீம் இந்தியாவுக்கு தேர்வு.. சச்சினின் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி!
இந்திய அணி நீண்ட காலமாக டி20 போட்டிகளில் வலுவாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியா கடைசியாக 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஒரு டி20 தொடரை இழந்தது. அதன் பிறகு, இந்திய அணி 16 தொடர்களில் விளையாடி, ஒரே ஒரு தொடரை மட்டுமே சமன் செய்துள்ளது. இந்திய அணி 15 டி20 தொடர்களை வென்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் அந்தச் சாதனையைத் தக்கவைக்க வேண்டும். அந்தச் சாதனைக்கு இடையூறு ஏற்பட்டால், உடனடியாக ஷ்ரேயாஸ் ஐயர் மீது பழி சுமத்தப்படும்.