WTC புள்ளிப்பட்டியலில் இடம் பெறாத இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்! காரணம் என்ன?
IndvsAfg : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், சமீபத்திய தோல்விகளால் துவண்டுள்ள இந்திய வீரர்களுக்கு தங்கள் தன்னம்பிக்கையை மீட்டெடுக்க போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது நியூ சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த போட்டி டெல்ஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறாது?
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 9 முன்னணி நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடு என்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நாடுகளின் வரிசையில் இடம் பெறவில்லை. இதனால் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
இதையும் படிக்க : IPL 2026: முழு சம்பளத்தை மும்பை அணி தரவில்லை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய சாண்ட்னர்!




பொதுவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் குறைந்தது 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும். ஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் இந்த போட்டி, ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இது வரை 3 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் வென்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 0 – 2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க : IND vs IRE: அயர்லாந்து சுற்றுப்பயணம்.. இந்திய அணிக்கு யார் கேப்டன்? குழப்பத்தில் பிசிசிஐ!
இதன் மூலம் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4 வெற்றிகள், 4 தோல்விகள், 1 டிரா என 48.15 சதவிகித புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் 6வது இடத்தில் உள்ளது. சமீப காலமாக இந்திய அணி சொந்த மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய அணணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறிவவருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் பயிற்சியாளர் மற்றும் அணியில் வீரர்கள் தேர்வு உள்ளிட்டவற்றி மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.