AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs PAK W: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் ஏன்..? ஸ்மிருதி மந்தனா கேள்வி!

Smriti Mandhana: இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் அளிக்கப்படக்கூடாது. மாறாக, ஒட்டுமொத்த மகளிர் டி20 உலகக் கோப்பைக்கே இதே போன்ற விளம்பரமும் கவனமும் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

IND W vs PAK W: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் ஏன்..? ஸ்மிருதி மந்தனா கேள்வி!
ஸ்மிருதி மந்தனா
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Jun 2026 20:22 PM IST

2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC T20 Womens World Cup 2026) இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் (Ind vs pak) போட்டிக்கு மட்டும் அதிக விளம்பரம் அளிக்கப்படக்கூடாது. மாறாக, ஒட்டுமொத்த மகளிர் டி20 உலகக் கோப்பைக்கே இதே போன்ற விளம்பரமும் கவனமும் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 2026 டி20 மகளிர் உலகக் கோப்பையில் வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானுடனான மோதலுடன் இந்தியாவின் பயணம் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, லீக் ஸ்டேஜ் போட்டிகளில் நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ALSO READ: முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராக.. டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் அட்டவணை!

அதிக முக்கியத்துவம் இதற்கு கொடுங்கள்..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மகளிர் டி20 சர்வதேசப் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, ” கடந்த 2022ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் இந்தியா-பாகிஸ்தான் அணியுடன் விளையாடினோம். அப்போது, அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டுமல்ல, டி20 உலகக் கோப்பையை நாம் உண்மையிலேயே பிரபலப்படுத்த வேண்டும் என்று நான் உணர்கிறேன். ஒரே ஒரு போட்டியை மட்டும் நாம் பிரபலப்படுத்தத் தேவையில்லை.

இது ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மக்கள் வந்து எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்களுக்காக எங்களால் ஒரு சிறப்பான விளையாட்டை நாங்கள் கொடுப்போம் என நம்புகிறோம்,” என்று கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை நேருக்கு நேர்:

மகளிர் டி20 போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இதற்கு முன்பு 16 முறை மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இவ்விரு அணிகளும் கடைசியாகச் சந்தித்தது சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

ALSO READ: இந்தியா முதல் இங்கிலாந்து வரை.. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் விவரம்!

இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் மந்தனா, இதுவரை நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 25 இன்னிங்ஸ்களில், 21.83 சராசரி மற்றும் 114.41 ஸ்டிரைக் ரேட்டுடன் 524 ரன்கள் எடுத்துள்ளார். இத்தொடரில் இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேற வேண்டுமானால், ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டத்திறன் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Follow Us