ICC T20 Womens World Cup: முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராக.. டி20 உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் அட்டவணை!
Indian Women's Team Schedule: மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, 12 அணிகள் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன. இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே வருகின்ற 2026 ஜூன் 12ம் தேதி நடைபெறுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தத் தொடரில் தனது பயணத்தை வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மாபெரும் போட்டியுடன் தொடங்கும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (ICC T20 Womens World Cup) போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஐசிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த உலகக் கோப்பையின் 10வது சீசன் 2026 ஜூன் 12 அன்று தொடங்கி 2026 ஜூலை 5ம் தேதி வரை நடைபெறும். இந்த முறை உலகக் கோப்பை மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இதுவரை இல்லாத வகையில் மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக, 12 அணிகள் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன. இந்தத் தொடரின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே வருகின்ற 2026 ஜூன் 12ம் தேதி நடைபெறுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (Indian Womens Cricket Team), இந்தத் தொடரில் தனது பயணத்தை வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு மாபெரும் போட்டியுடன் தொடங்கும்.
இந்திய அணியின் போட்டிகள் அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இதனால், ரசிகர்கள் அதிக நேரம் விழித்திருக்காமல், தங்களுக்குப் பிடித்த அணியை தொலைக்காட்சி மற்றும் மொபைல் மூலம் எளிதாக பார்க்க முடியும்.
ALSO READ: இந்தியா முதல் இங்கிலாந்து வரை.. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அணிகளின் விவரம்!




| போட்டி | தேதி | இந்திய நேரம் | இங்கிலாந்தில் போட்டி நேரங்கள் | இடம் |
|---|---|---|---|---|
| இந்தியா vs பாகிஸ்தான் | ஜூன் 14, 2026 | மாலை 7:00 மணி | பிற்பகல் 2:30 மணி | எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் |
| இந்தியா vs நெதர்லாந்து | ஜூன் 17, 2026 | மாலை 7:00 மணி | பிற்பகல் 2:30 மணி | ஹெடிங்லி, லீட்ஸ் |
| இந்தியா vs தென்னாப்பிரிக்கா | ஜூன் 21, 2026 | மாலை 7:00 மணி | பிற்பகல் 2:30 மணி | ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் |
| இந்தியா vs பங்களாதேஷ் | ஜூன் 25, 2026 | மாலை 7:00 மணி | பிற்பகல் 2:30 மணி | ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் |
| இந்தியா vs ஆஸ்திரேலியா | ஜூன் 28, 2026 | மாலை 7:00 மணி | பிற்பகல் 2:30 மணி | லார்ட்ஸ், லண்டன் |
இத்தொடரில் தங்களது இடங்களை உறுதிசெய்த இறுதி 4 அணிகள் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகும். நேபாளத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த 4 அணிகளும் பிரதான சுற்றில் தங்களது இடங்களை உறுதி செய்தன.
ALSO READ: வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறாரா? பிசிசிஐ கொடுத்த குட் நியூஸ்!
தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்த 4 அணிகளும், பட்டத்தை வெல்ல வலுவான போட்டியாளர்களாகக் கருதப்படும் பலம் வாய்ந்த அணிகளுக்கு இப்போது சவால் விடும். பிரதான தொடரில் ஏற்கனவே 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான நியூசிலாந்து, போட்டியை நடத்தும் நாடும் 2009-ஆம் ஆண்டின் முதல் சாம்பியனுமான இங்கிலாந்து, 2016 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா போன்ற வலிமையான அணிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த அணிகளுக்குள் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.