AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறாரா? பிசிசிஐ கொடுத்த குட் நியூஸ்!

Vaibhav Sooryavanshi: பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியாவின் இந்த அறிக்கை, இந்தியாவின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் தொடங்கவிருக்கும் வேளையில் வந்துள்ளது. 2026 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணங்களுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ செயலாளர் சாய்கியாவின் இந்த தகவல் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

Team India: வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறாரா? பிசிசிஐ கொடுத்த குட் நியூஸ்!
வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2026 16:57 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi)
தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதம் பாராட்டத்தக்கதாக இருந்தது. இதுமட்டுமின்றி, இந்தியா ஏ, அண்டர் 19 உலகக் கோப்பை, உள்நாட்டு தொடர் என தனக்கு வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் வைபவ் சூர்யவன்ஷி பயன்படுத்திகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.  இதன் விளைவாக, இந்திய அணி (Indian Cricket Team) தேர்வாளர்களுக்கு பிசிசிஐ-யிடமிருந்து குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. இந்திய அணியைத் தேர்வு செய்யும் அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினருக்கு, வைபவ் சூர்யவன்ஷிக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுக்குமாறு பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா அறிவுறுத்தியுள்ளார்.

ALSO READ: சின்ன ஸ்டிக்கர்… சூர்யவன்ஷியை தேடி வரும் ரூ.12 கோடி.. பேட் விளம்பரத்துக்கு கடும் போட்டி!

அயர்லாந்து-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வைபவ் அறிமுகமாவாரா?


பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியாவின் இந்த அறிக்கை, இந்தியாவின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் தொடங்கவிருக்கும் வேளையில் வந்துள்ளது. 2026 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணங்களுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைபவ் சூர்யவன்ஷி அணியில் இடம்பெறுவது குறித்து ஏற்கனவே யூகங்கள் நிலவி வந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் சாய்கியாவின் இந்த தகவல் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி பற்றி பிசிசிஐ செயலாளர் என்ன கூறினார்?

வைபவ் சூர்யவன்ஷி குறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறியதாவது, “வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்திறனில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். வைபவ் இந்திய கிரிக்கெட்டின் அதிசயச் சிறுவன். எதிர்காலத்தில் அவர் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஐபிஎல் 2026-ன் போது இந்திய அணியின் தேர்வாளர்கள் அனைவரும் உடனிருந்தனர். அவர்கள் போட்டிகளை உன்னிப்பாகக் கவனித்தனர். வைபவ் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது, ​​அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளைத் தேர்வு செய்ய அவர்கள் அமரும்போது, ​​வைபவிற்கு எது சிறந்ததோ அதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

தேர்வாளர்களுக்கான தெளிவான அறிவுறுத்தல்கள்

கேப்டன் மற்றும் இந்தியத் தேர்வாளர்களைத் தவிர, பிசிசி செயலாளர் தேவ்ஜித் சாய்கியாவும் இந்திய அணியின் தேர்வுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். எனவே, அவரது அறிக்கை இந்தியத் தேர்வாளர்களுக்கான ஒரு வழிகாட்டுதலாகப் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பிசிசிஐ தலைவர் மிதுன் மின்ஹாஸ் மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரும் வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டியுள்ளனர்.

ALSO READ: முடிந்த ஐபிஎல் போட்டிகள்.. சர்வதேச போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்கள்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!

வைபவை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்:

சச்சின் டெண்டுல்கர், வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டியபோது அஜித் அகர்கரும் உடனிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி, சச்சினின் அடிக்கும் திறன், மணிக்கட்டு வேகம் மற்றும் பந்தை கணிக்கும் திறன் ஆகியவற்றை பாராட்டியிருந்தார். வைபவ் சூர்யவன்ஷி குறித்து சச்சின் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து இந்திய தேர்வாளர்களை பரிசீலிக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

 

Follow Us