ஒரு பெரிய நகரத்தையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட உலகின் பணக்கார கிராமம் இந்தியாவில் அமைந்துள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதாப்பர் கிராமம்தான் வங்கி வைப்புத் தொகை அடிப்படையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 32,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்தக் கிராம மக்களின் மொத்த வங்கிக் கணக்கு வைப்புத் தொகை 8,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.