ஓடும் ரயிலில் பூஜை செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவில், ரயிலின் பெட்டி ஒன்றில் ஒரு பூசாரி அமர்ந்து பூஜை செய்ய, அவரைச் சுற்றி சிலர் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ரயிலுக்குள் இத்தகைய மதச் சடங்குகள் நடத்த அனுமதி உண்டா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த சர்ச்சை குறித்து வடக்கு ரயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது, அந்த பூஜை நடந்த இடம் சாதாரண பயணிகள் பெட்டி அல்ல.