IND vs NZ: 40 நாட்களில் 2 டெஸ்ட் உள்பட 12 போட்டிகள்.. வெளியான இந்தியா – நியூசிலாந்து தொடருக்கான அட்டவணை!
India vs New Zealand Full Schedule: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்திலும், 2வது ஒருநாள் போட்டி நவம்பர் 7 ஆம் தேதி வெலிங்டனிலும், 3வது ஒருநாள் போட்டி நவம்பர் 10ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறும். 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகள் முறையே 2026 நவம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் மவுண்ட் மவுங்கானுயில் (டவுரங்கா) உள்ள பே ஓவலில் நடைபெறும்.
ஆப்கானிஸ்தான் (IND vs AFG) தொடருக்கு பிறகு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (NZC) இன்று அதாவது 2026 ஜூன் 3ம் தேதி தனது 2026/27 உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது. இதில், இந்திய அணிக்கு (Indian Cricket Team) எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணமும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, வருகின்ற 2026 அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்திய ஆண்கள் அணி நியூசிலாந்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும். இந்த இரு நாட்டு தொடர்களில் 5 டி20 போட்டிகள் , 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என 12 போட்டிகள் இடம்பெறும். இந்திய அணி 2026 அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.
ALSO READ: ஆப்கானிஸ்தான் டெஸ்ட்க்குமுன் அதிரடி.. இந்திய அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்!
நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு அணியும் மேற்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த போட்டிகள் அனைத்து நியூசிலாந்தின் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும். இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான கிட்டத்தட்ட 100 ஆண்டுகால விளையாட்டு உறவை நினைவுகூரும் வகையில், இந்த சுற்றுப்பயணத்திற்கு நியூசிலாந்து அரசும் தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது.




நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அதிகாரி கிளென் கிரிட்ச்லி கூறுகையில், “இது ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவை விட பெரியது எதுவும் இல்லை. நாங்கள் நியூசிலாந்து மக்களுக்கு இதுவரை இல்லாத ஒரு சுற்றுப்பயணத்தை வழங்கப் போகிறோம். இது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, நமது பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் வளர்ந்து வரும் நட்பின் கொண்டாட்டமாகவும் இருக்கும்” என்றார்.
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ஒரு டி20ஐ தொடருடன் தொடங்கும். முதல் டி20ஐ போட்டி 2026 அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெறும். 2வது டி20ஐ போட்டியும் 2026 அக்டோபர் 24ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சிலும், 3வது டி20ஐ போட்டி 2026 அக்டோபர் 27ம் தேதி வெலிங்டனிலும், 4வது டி20ஐ போட்டி 2026 அக்டோபர் 30ம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கிலும், 5வது மற்றும் கடைசி டி20ஐ போட்டி 2026 நவம்பர் 1ம் தேதி ஹாமில்டனில் உள்ள செடன் பார்க்கிலும் நடைபெறும்.
5 ஒருநாள் தொடருக்கான அட்டவணை:
இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி ஆக்லாந்திலும், 2வது ஒருநாள் போட்டி நவம்பர் 7 ஆம் தேதி வெலிங்டனிலும், 3வது ஒருநாள் போட்டி நவம்பர் 10ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறும். 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகள் முறையே 2026 நவம்பர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் மவுண்ட் மவுங்கானுயில் (டவுரங்கா) உள்ள பே ஓவலில் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.
ALSO READ: உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும்.. ஹர்திக்-ரோஹித்துக்கு பிசிசிஐ விடுத்த இறுதி எச்சரிக்கை!
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 2026 நவம்பர் 19 முதல் 23 வரை வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 2026 நவம்பர் 27 முதல் 2026 டிசம்பர் 1 வரை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவலில் நடைபெறும். இந்த முழு சுற்றுப்பயணமும் அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1, 2026 வரை வெறும் 40 நாட்களில் நடைபெறுகிறது.