மத்தியப் பிரதேசத்தில், தனது உரிமையாளரின் இறுதி ஊர்வலத்தின்போது உயிரிழந்த செல்ல நாயின் சம்பவம், சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான பிரதீப் ஜெயின், போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.