IPL 2026: முழு சம்பளத்தை மும்பை அணி தரவில்லை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய சாண்ட்னர்!
Mumbai Indians: காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னரால் மும்பை அணிக்காக முழு சீசனிலும் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக தனக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பாதி சம்பளத்தை மட்டுமே வழங்கியதாகவும், மும்பை அணி, சான்ட்னரை 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) முடிவடைந்து, இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளை நோக்கி நகர தொடங்கி விட்டனர். ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப் போட்டியானது கடந்த 2026 மே 31ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி சுப்மன் கில் தலைமையிலான குஜராத்தை (Gujarat Titans) வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதற்கிடையில், இந்த சீசன் முடிந்து 4 நாட்களுக்குப் பிறகு, ஒரு அதிர்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதில், ஒரு வெளிநாட்டு வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த சீசனுக்கான முழு சம்பளத்தையும் வழங்கவில்லை என்று அந்த வீரர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீரர் வேறு யாருமல்ல, நியூசிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர்தான்.
ALSO READ: ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்.. சாலைகளில் அத்துமீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி..!
மும்பை அணிக்காக முழு சீசனிலும் விளையாடாத சாண்ட்னர்:
காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னரால் மும்பை அணிக்காக முழு சீசனிலும் விளையாட முடியவில்லை. இதன் காரணமாக தனக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பாதி சம்பளத்தை மட்டுமே வழங்கியதாகவும், மும்பை அணி, சான்ட்னரை 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேருவதற்காக காயத்தை போலியாகக் காட்டியதாகவும் சான்ட்னர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, இந்த நிலைமை குறித்து ஆல்-ரவுண்டர் சான்ட்னர் கருத்து தெரிவித்துள்ளார்.




தோள்பட்டை காயம் காரணமாக விலகல்:
தனது இரண்டாவது குழந்தை பிறந்ததன் காரணமாக மும்பையின் முதல் போட்டியில் தன்னால் விளையாட முடியவில்லை என்று சான்ட்னர் விளக்கினார். பின்னர் சான்ட்னர் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி, தனது வலது தோள்பட்டையில் காயம் அடைந்தார். மீண்டும் அணிக்குத் திரும்பிய சான்ட்னர், தனது இடது தோள்பட்டையில் காயம் அடைந்ததால், அந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
காயத்தின்போதும் முழு ஒத்துழைப்பு..
இதுகுறித்து பேசிய மிட்செல் சான்ட்னர், “ தனது இரு தோள்களிலும் காயமடைந்திருந்தேன். இருப்பினும், மும்பை அணிக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்தேன். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தனது சம்பளத்தைக் கோரியபோது, மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு வழங்க வேண்டிய 2 கோடி ரூபாயில் பாதியை மட்டுமே வழங்கியது. அது தனக்குச் சற்றும் பிடிக்கவில்லை” என்று கூறினார்.
ALSO READ: சாம்பியன் வென்ற அணிக்கு ஆர்சிபிக்கு ஷாக்.. நட்சத்திர வீரர் விளையாட தடை விதிப்பு!
காயமடைந்த வீரர்கள் தொடர்பான ஐபிஎல் விதிமுறைகள் என்ன?
ஐபிஎல் விதிகளின்படி, ஒரு வீரர் சீசனின் நடுவில் காயமடைந்தால், அவருக்கு அவரது ஒப்பந்தத் தொகை முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், சில சமயங்களில் வீரர்கள் தங்களது சம்பளத்தைத் தவணை முறையில் சிறு சிறு தொகையாக பெறுவார்கள். தற்போது, சான்ட்னரின் அறிக்கை குறித்து மும்பையிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை .