தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக நிலைப்பாடு என்ன.. திருச்சி சிவா எம்.பி. விளக்கம்!
Constituency Delimitation Bill DMK Stance : தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்ற விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்துடன் நாளை திங்கள்கிழமை ( ஜூலை 20- ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திமுக எம்பி.ஆன திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறைகளை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தென் மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரிக்கிறது. தொகுதி மறு வரையறை குறித்து மேலும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான மறைவு மசோதாவை பார்த்து பின்னரே திராவிட முன்னேற்ற கழகத்தின் இறுதி நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த முறை தோல்வி அடைந்த தொகுதி மறுவரையறை மசோதா
கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற போது தொகுதியில் மறு வரை மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி செய்தது. ஆனால், அப்போது மசோதாவை நிறைவேற்ற போதுமான மூன்றில் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமல் தோற்கடிக்கப்பட்டது. தற்போது, பல்வேறு மாநிலங்களில் அரசியல் சூழல் மாறி உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் வலியுறுத்தல்!




திமுகவிடம் ஆதரவை கோரும் பாஜக
இது மட்டும் இன்றி சில கட்சிகளின் ஆதரவு அளிக்கும் சூழலும் உருவாகி உள்ளது. இதன் மூலம் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் ஆதரவை பெறுவதற்காக மத்திய பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, நேற்று தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே, தொகுதி மறு வரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு திமுகவின் ஆதரவை பாஜக கோரும் என்று தெரிவித்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு
இதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தனது கருத்தை முன்வைத்து பேசி இருந்தார். இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திமுகவின் நிலைப்பாட்டை அந்த கட்சியின் எம்பி- ஆன திருச்சி சிவா தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!