கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் வலியுறுத்தல்!
CPI Veerapandian : நீட் தேர்வு முறைகே உள்ளிட்ட புகார்கள் காரணமாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை மத்திய பாரதிய ஜனதா அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பொறுப்பு ஏற்று பதவி விலக கோரி சமூக நல ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர், அங்கிருந்து காவல்துறையால் பலவந்தமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 21 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
ஜனநாயக உரிமையை சிதைக்கு வகையில்
அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், மன உறுதியுடன் போராடி வந்தார். அவருடன், போராட்ட களத்தில் ஈடுபட்டிருந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக ஜனநாயக உரிமையான போராட்டத்தை சிதைக்கும் வகையில் மத்திய உள்துறை செயல்பட்டுள்ளது. தனது கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி காவல்துறையை போராடுபவர்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு ஏவி விட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது ஆகும். மத்திய கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி.. சிவகங்கையில் கையும் களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரிகள்!




மத்திய கல்வி மந்திரியை பதவி நீக்கம் செய்யனும்
இந்த போராட்டத்துக்கு மதிப்பளித்து தர்மேந்திர பிரதான உடனடியாக மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றால் அதற்கு தயாராகி வந்த மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்த நீட் தேர்வாள் ஏராளமான மாணவர்கள் அச்சமடைந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்
அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வு ஏற்கனவே வினாத்தாள் கசிவால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வின் காரணமாக ஏராளமான ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போகிறது. எனவே, நீட் தேர்வு விவகாரத்தில் உள்ள பல்வேறு முறைகேடுகளை முன்னிறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக நல ஆர்வலர் சோனம் வாங்சுக் பல நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களின் ஜாதி விவரங்கள் கட்டாயம்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!