ஃபிஃபா உலகக்கோப்பை 2026 : கோல்டன் பால் விருது யாருக்கு? கடும் போட்டி!
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் கோல்டன் பால் விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதில் குறிப்பாக அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் ரோட்ரி, பிரான்சின் திலியன் எம்பாபே மற்றும் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த தொடரில் கோல்டன் பால் விருது யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் கோல்டன் பால் விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் ரோட்ரி, பிரான்சின் திலியன் எம்பாபே மற்றும் இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோல்டன் பால் விருது என்றால் என்ன?
உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு கோல்டன் பூட் வழங்கப்படும். ஆனால் முழு உலகக்கோப்பை தொடரிலும் ஒரு வீரர் அணிக்காக ஏற்படுத்திய தாக்கம், ஆட்டத்தின் போக்கை மாற்றிய விதம், சிறந்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த விருது வெற்றி பெறும் அணிக்காக மட்டும் அல்லாமல் அனைத்து அணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இறுதிப்போட்டி முடியும் வரை இந்த விருது யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும்.
இதையும் படிக்க : FIFA World Cup 2026: அர்ஜென்டினா வெற்றி சர்ச்சை.. யார் காரணம்..? ஓபனாக பேசிய மெஸ்ஸி!




லியோனல் மெஸ்ஸி தனது 39 வயதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். அர்ஜென்டினாவை தொடர்ந்து 2வதுமுறையாக உலகக்கோப்பை போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இதுவரை அவர் 7 போட்டிகளில் அபாரமாக ஆடியுள்ள அவர் 8 கோல்கள் அடித்துள்ளார். எகிப்து, இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக முக்கியமான தருணங்களில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் கோல்டன் பூட் பட்டியலிலும் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார். அர்ஜென்டினா சாம்பியன் பெற்றால் தொடர்ச்சியாக 2வதுமுறை கோல்டன் பால் வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
மேலும், ஸ்பெயின் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருபவர் ரோட்ரி. 92 சதவிகிதம் அதிகமான பந்தை பாஸ் செய்யும் விதம், பந்தை எதிரணியில் இருந்து மீட்டெடுக்கும் திறன் ஆகியவை அவரது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி 7 போட்டிகளில் வெறும் ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது. அதற்கு ரோட்ரியின் மிட் ஃபீல்ட் பகுதியில் கட்டுப்பாடான ஆட்டமே காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றால் கோல்கள் குறைவாக இருந்தாலும், கோல்டன் பால் விருது அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : FIFA World Cup 2026: பைனலில் ஸ்பெயினை எதிர்கொள்ள அர்ஜென்டினா.. இரு அணிகளின் முழு விவரம்!
அதே போல ஃபிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும், கிலியன் எம்பாப்பே கோல்டன் பால் விருதுக்கான ரேஸில் இடம் பிடித்துள்ளார். அரையிறுதி போட்டியில் ஃபிரான்ஸ் தோல்வியடைந்தாலும், எம்பாப்பே தனது திறமையை வெளிப்படுத்த தவறவில்லை. இந்த தொடரில் 8 கோல்கள் அடித்துள்ளார். ஃபிரான்ஸ் சார்பாக அடிக்கப்பட்ட 16 கோல்களில் 11 கோல்களில் அவரது நேரடியாக பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.