AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: அர்ஜென்டினா வெற்றி சர்ச்சை.. யார் காரணம்..? ஓபனாக பேசிய மெஸ்ஸி!

Argentina vs Spain Final: அர்ஜென்டினா மீண்டும் 2வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸியின் அர்ஜென்டினா மீண்டும் ஒரு கோப்பை தூக்க ஸ்பெயினை எதிர்கொள்கின்றனர்.

FIFA World Cup 2026: அர்ஜென்டினா வெற்றி சர்ச்சை.. யார் காரணம்..? ஓபனாக பேசிய மெஸ்ஸி!
அர்ஜென்டினா - ஸ்பெயின்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Jul 2026 19:38 PM IST

ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) தொடங்கியதிலிருந்தே நடப்பு சாம்பியன் அணியான அர்ஜென்டினா (Argentina Football Team) தொடர்பாக சர்ச்சை உருவாகி வருகிறது. மெஸ்ஸியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் கருத்துகள் வெள்ளமெனப் பரவி வருகின்றன. ஃபிஃபா அர்ஜென்டினா அணிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், எனவே, எப்படியும் அர்ஜென்டினா அணிதான் கோப்பை வெல்ல போகிறது என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மெஸ்ஸி அணிக்கு நடுவர்கள் குழு தொடர்ந்து சாதகமான முடிவுகளை தருவதாகவும் கூறி வருகின்றனர். அர்ஜென்டினாவின் முதல் போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக மெஸ்ஸி செய்த ஒரு ஸ்டாண்ட்-அப் டேக்கிளில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. பின்னர், எகிப்து – அர்ஜென்டினா போட்டியில் VAR முடிவு குறித்து கேள்விகள் எழுந்தன.

ALSO READ: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை.. இறுதிப்போட்டியை எங்கே, எப்போது நேரலையில் பார்க்கலாம்?

மெஸ்ஸி விளக்கம்:

இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு லியோனல் மெஸ்ஸி இதுகுறித்து முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், மெஸ்ஸி கூறியதாவது, “யார் வேண்டுமானாலும் வருத்தப்படட்டும். கடந்த 4 ஆண்டுகளாக, நாங்கள் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறோம். இதை யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும், யதார்த்தம் மாறப்போவதில்லை. மீண்டும் ஒருமுறை, நாங்கள் உலகின் 2 சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறோம். தொடர்ச்சியாக 2 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது எளிதல்ல. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அந்தச் சாதனையை நாங்களே சம்பாதித்தோம்.” என்றார்.

தொடர்ந்து மெஸ்ஸி விமர்சகர்களிடம், “நாங்கள் இங்கிலாந்திடம் தோற்றிருந்தால், பலர் கடுமையாகப் பேசியிருப்பார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை. டியாகோ மேலிருந்து இந்த வெற்றியை நிச்சயம் கொண்டாடிக்கொண்டிருப்பார். இன்று அவருக்கும் ஒரு சிறப்பான நாள். அவருக்கு இந்த மகிழ்ச்சியை அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.

ALSO READ: பைனலில் ஸ்பெயினை எதிர்கொள்ள அர்ஜென்டினா.. இரு அணிகளின் முழு விவரம்!

அர்ஜென்டினா மீண்டும் 2வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸியின் அர்ஜென்டினா மீண்டும் ஒரு கோப்பை தூக்க ஸ்பெயினை எதிர்கொள்கின்றனர். அந்தப் போட்டியில் அர்ஜென்டினா மீண்டும் வெற்றி பெற்றால், 1962-ல் பிரேசில் வென்றதற்குப் பிறகு, தொடர்ச்சியாக 2 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை லியோனல் மெஸ்ஸியின் அணி படைக்கும்.

Follow Us