FIFA World Cup 2026: பைனலில் ஸ்பெயினை எதிர்கொள்ள அர்ஜென்டினா.. இரு அணிகளின் முழு விவரம்!
Argentina vs Spain Final: கடந்த 2026 ஜூலை 15ம் தேதி இரவு நடந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா (Argentica Football Team) தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) இறுதிப் போட்டியை காண கால்பந்து ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், 2010-ஆம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினும், வருகின்ற ஜூலை 19ம் தேதி அதிகாலை 12:30 மணிக்கு நியூயார்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் மோதுகின்றன. கடந்த 2026 ஜூலை 15ம் தேதி இரவு நடந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா (Argentica Football Team) தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், கடந்த சீசனின் இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்தவகையில், இந்த இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதை காண ஆவல் அதிகரிக்கிறது.
ALSO READ: ஃபிஃபா உலகக் கோப்பை: கெத்து காட்டிய மெஸ்ஸி.. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா
மிகப்பெரிய எதிர்பார்ப்பு:
இறுதிப் போட்டியில் இரு வேறுபட்ட கால்பந்து பாணிகள் மோதவுள்ளன. இத்தொடரின் முன்னணி கோல் அடித்தவரான லியோனல் மெஸ்ஸியும், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், ஸ்பெயினின் வலுவான அணியை எதிர்கொள்கின்றன. மெஸ்ஸியைச் சமாளிக்க, ஸ்பெயின் அணியில் 19 வயதான லமின் யமால் என்ற ஃபார்வேர்ட் வீரர் உள்ளார்.




உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் அதிக முறை விளையாடிய அணிகள்
- ஜெர்மனி – 8 முறை
- அர்ஜென்டினா, பிரேசில் – 7 முறை
- இத்தாலி – 6 முறை
- பிரான்ஸ் – 4 முறை
- நெதர்லாந்து – முறை
- ஸ்பெயின், உருகுவே, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா- 2 முறை
அர்ஜென்டினா சரித்திரம் படைக்குமா?
ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அர்ஜென்டினா 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளதுடன், தொடர்ச்சியாக 2 சாம்பியன் பட்டங்களை வென்ற 2வது அணி என்ற சாதனையை எட்டுவதற்கு இன்னும் ஒரு படி தொலைவில் உள்ளது. 1958 மற்றும் 1962-ல் தொடர்ச்சியாக 2 உலகக் கோப்பைகளை வென்ற பிரேசில் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. ஸ்பெயின், 2010-க்குப் பிறகு தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் உள்ளது.
இறுதிப் போட்டிக்கு ஸ்பெயினின் பயணம்:
ஸ்பெயின் அணியானது லீக் ஸ்டேஜ் போட்டியில் கேப் வெர்டேவுடன் 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. சவுதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதனை தொடர்ந்து, உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. காலிறுதியில் பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அரையிறுதியில் பிரான்சுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ALSO READ: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை.. இறுதிப்போட்டியை எங்கே, எப்போது நேரலையில் பார்க்கலாம்?
அர்ஜென்டினாவின் இறுதிப்போட்டி பயணம்:
அர்ஜென்டினா தனது லீக் ஸ்டேஜ் போட்டியில் அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஆஸ்திரியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும், ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வென்றனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேப் வெர்டேவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றனர். காலிறுதியில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்றனர்.