AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: ஃபிஃபா அரையிறுதி தோல்வியால் வெடித்த கலவரம்.. பிரான்ஸ் ரசிகர்களால் பற்றி எரியும் ஊர்!

FIFA World Cup 2026 Semi Final: இரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் 22-வது நிமிடத்தில் மிக்கேல் ஓயர்சபல் முதல் கோலை அடித்து, ஸ்பெயினுக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். பின்னர், 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து, ஸ்பெயினின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

FIFA World Cup 2026: ஃபிஃபா அரையிறுதி தோல்வியால் வெடித்த கலவரம்.. பிரான்ஸ் ரசிகர்களால் பற்றி எரியும் ஊர்!
பிரான்சில் கலவரம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jul 2026 16:49 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) முதல் அரையிறுதிப் போட்டி, இன்று அதாவது 2026 ஜூலை 14ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு டல்லாஸ் மைதானத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் (Spain Football Team) அணிகளுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதன்படி, கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கிடையில், பிரான்சின் தோல்வியால் அந்நாட்டு மக்கள் மிகுந்த வருத்தமடைந்ததாக தெரிகிறது. பிரான்ஸ் அணியின் தோல்வியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் போன்ற சூழல் நிலவியது. அதன்படி, மக்கள் தெருக்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதைக் காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. சில இடங்களில் தீ வைப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நாட்டின் தலைநகரான பாரிஸிலும் ஒரு சில இடங்களில் கலவரங்கள் வெடித்தன.

ALSO READ: பைனலுக்கு செல்ல மாபெரும் போராட்டம்.. அர்ஜென்டினா – இங்கிலாந்து மோதல்! ஹெட் டூ ஹெட் விவரம்!

பிரான்சின் கனவு கலைந்தது..


மூன்றாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பிரான்சின் கனவு மீண்டும் ஒருமுறை தகர்க்கப்பட்டது. இதற்கு முந்தைய 2022 உலகக் கோப்பையில், பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அர்ஜென்டினாவிடம் தோற்றது. அந்த போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. பின்னர், லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில் நடந்தது என்ன..?

இரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் 22-வது நிமிடத்தில் மிக்கேல் ஓயர்சபல் முதல் கோலை அடித்து, ஸ்பெயினுக்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். பின்னர், 58-வது நிமிடத்தில் பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து, ஸ்பெயினின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதனால், பிரான்ஸ் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்தது. ஆட்டம் முடியும் வரை பிரான்ஸால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. பிரான்ஸ் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நட்சத்திர வீரரும் கேப்டனுமான கைலியன் எம்பாப்பேவால் எதையும் செய்ய முடியவில்லை.

ALSO READ: 40 ஆண்டுகளுக்கு பிறகு சம்பவம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின்!

இறுதிப்போட்டி எப்போது..?

ஃபிஃபா உலகக் கோப்பை பைனலானது இந்திய நேரப்படி, வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் எந்த அணியை எதிர்கொள்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நாளை அதாவது 2026 ஜூலை 16ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

Follow Us