AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: பைனலுக்கு செல்ல மாபெரும் போராட்டம்.. அர்ஜென்டினா – இங்கிலாந்து மோதல்! ஹெட் டூ ஹெட் விவரம்!

Argentina vs England Semi Final: இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், என்னதான் லியோனல் மெஸ்ஸி போன்ற நட்சத்திர வீரர் அர்ஜெண்டினா அணியில் இருந்தாலும், இங்கிலாந்தே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி, இங்கிலாந்து 3 போட்டிகளிலும், அர்ஜென்டினா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

FIFA World Cup 2026: பைனலுக்கு செல்ல மாபெரும் போராட்டம்.. அர்ஜென்டினா – இங்கிலாந்து மோதல்! ஹெட் டூ ஹெட் விவரம்!
ஹாரி கேன் - லியோனல் மெஸ்ஸி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jul 2026 18:38 PM IST

20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது வருகின்ற 2026 ஜூலை 16ம் தேதி 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் (FIFA World Cup 2026) அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி, உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது. லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது அர்ஜென்டினா அணியை தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்கும், ஒட்டுமொத்தமாக நான்காவது சாம்பியன் பட்டத்திற்கும் அழைத்து செல்ல முயற்சி செய்வார். அதேசமயம், இங்கிலாந்து கடந்த 60 ஆண்டுகளாக இந்த கோப்பையை வென்றதில்லை.

ALSO READ: பணமோசடி குற்றச்சாட்டு! அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு தடையா?

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவும் இங்கிலாந்தும் தோல்வியடையாமல் உள்ளன. இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதும்போது, ​​அனைவரின் பார்வையும் லயோனல் மெஸ்ஸி மற்றும் இங்கிலாந்தின் இளம் மிட் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் மீது இருக்கும். இதுமட்டுமின்றி, இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், என்னதான் லியோனல் மெஸ்ஸி போன்ற நட்சத்திர வீரர் அர்ஜெண்டினா அணியில் இருந்தாலும், இங்கிலாந்தே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். அதன்படி, இங்கிலாந்து 3 போட்டிகளிலும், அர்ஜென்டினா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், அர்ஜென்டினா பெற்ற ஒரு வெற்றி பெனால்டி முறையில் கிடைத்தது.

  • 1962 உலகக் கோப்பை: இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
  • 1966 உலகக் கோப்பை: இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
  • 1986 உலகக் கோப்பை: அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
  • 1998 உலகக் கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
  • 2002 உலகக் கோப்பை: இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரு அணிகளும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 6 முறையும், அர்ஜென்டினா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 5 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.

ALSO READ: புகழ் பெறும் பெயர்.. பெரு நாட்டில் குழந்தைகளுக்கு எர்லிங் ஹாலண்ட் பெயர் வைப்பு!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி எப்போது நடைபெற்றது..?

இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் முதன்முதலில் கடந்த 1962ம் ஆண்டு உலகக் கோப்பையில் மோதிக்கொண்டன. லீக் சுற்றில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, 1966-ஆம் ஆண்டு வெம்ப்ளியில் நடந்த காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கோப்பையை வென்றாலும், அந்த போட்டியில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதன்பிறகு, இந்த இரு அணிகளும் 24 ஆண்டுகளாக ஃபிஃபா உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதவில்லை. கடைசியாக 2002-ல் உலகக் கோப்பையில் சந்தித்தபோது, ​​இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போது, ​​20 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற மெக்சிகோ நகரத்தில் உள்ள அஸ்டெகா மைதானத்தில் இங்கிலாந்து –  அர்ஜென்டினா அணிகள் மோதவுள்ளன.

Follow Us