AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Forecast: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!

Tamil Nadu weather today: தமிழகத்தில் இன்று திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இதன் காரணமாக பள்ளிகளுக்கு அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக மழையில் அளவை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

Tamil Nadu Weather Forecast: வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Oct 2026 06:20 AM IST

சென்னை, அக்.26: தமிழகத்தில் இன்று திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதோடு, 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மிக தீவிர அர்னாப் புயலாக இன்று உருவாகிறது.

இதையும் படிக்க : அரிசியை பாலிஷ் போட்டு விற்பதுதான் மாற்றமா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி – என்ன நடந்தது?

இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (அக்.26) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கனமழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (அக்.27) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் வருகிறது நவீன சூப்பர் சைக்கிள்.. ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை:

திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டத்தில் தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இன்று (அக்.26) இரண்டு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us