AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வருகிறது 10 கிலோ கேஸ் சிலிண்டர்.. தீவிர ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்கள்!

10 KG Gas Cylinders Soon To Launch | தற்போதைய நிலவரப்படி 2 கிலோ மற்றும் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் தான் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களின் பயன்பாட்டுக்காக 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் அறிமுகமாக உள்ளன.

வருகிறது 10 கிலோ கேஸ் சிலிண்டர்.. தீவிர ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jul 2026 17:30 PM IST

இந்தியாவில் தற்போது 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், புதியதாக 10 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கான காரணம், அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

10 கிலோ கேஸ் சிலிண்டர்களை உருவாக்கும் அரசின் எண்ணெய் நிறுவனங்கள்

சாலையோர கடைகளில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவது சற்று கடினமானதாக உள்ளது. இந்த நிலையில் தான், சாலையோர கடைகளில் எளிதாக பயன்படுத்தும் வகையில் 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களை அறிமுகம் செய்ய அரசின் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதையும் படிங்க : செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.50 லட்சம் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

தள்ளுவண்டி கடைகளை நடத்தும் வியாபாரிகள் இந்த 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும்போது கடும் சிரமங்களை எதிர்க்கொள்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல இந்த 19 கிலோ கேஸ் சிலிண்டர்கள் சுலபமானதாக இருக்காது. அதன் காரணமாக தான், அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளன.

நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று ஆலோசனை மேற்கொள்ளும் நிறுவனங்கள்

ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் 2 மற்றும் 5 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களை பெட்ரோல் பங்குகளில் இருந்து வாங்கிச் சென்று பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில், நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தான், இந்த 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை எண்ணெய் நிறுவங்கள் மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us